பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 127 ஆங்கு வெற்றித் துரண், ஒன்றும் நாட்டிவிட்டு நாடு திரும்பினான். - வடபுலத்து - இரு காலாவதும் பெருபடை நடத்திக் கண்டர் தினகரன் நாரன்னன் கணவதி வண்டலர் தெரியல் மதுசூதன் என்று எனைப் பல வரையரை முனைவயின் துரத்தி வம்பலர் தரும்பொழில் கம்பிலி நகருள் சாளுக்கியர் மாளிகை தகர்ப்பித்து...” என அவன் மெய்க்ர்ேத்தி கூறுவது காண்க. நடைபெற்று முடிந்த போரில் சாளுக்கியர் படையின் ஒரு பகுதி மட்டுமே அழிவுற்றது; பெரும் பகுதி படையும், ஆகமேல்லனும் அழிவுற்றிலர் ஆகவே, அவர்களை அறவே அழிக்கும் எண்ணத்தின் கி. பி. 1048ல் இராச திராசன், மீண்டும் குந்தள நாடு நோக்கிச் சென்றான். கிருஷ்ணை ஆற்றங்கரையில் பூண்டுரில் தடைபெற்ற போரில் சாளுக்கிய படைத்தலைவர் பலன்ரக் கொன்றான்! எண்ணற்றவர் சிறை பிடிக்கப்பட்டினர்; மாளிகையை எரியூட்டி, வேங்கை பொறித்த வெற்றித் துரண் நாட்டினான். சாளுக்கியர் பேராறுகள்ாம், துங்க பத்திரை, கிருஷ்ணை, பீமா ஆறுகளில் தன் போர்க்களிறுகளைக் குளிப்பாட்டினான்: ஆகவமல்லன் ஒற்றர் சிலரைப் பிடித்து, ஆகவமல்லன்' எவ்வாறு புறங்காட்டி ஓடினான் என்பதை, அவர்கள் மார்பில் எழுதி ஆகவ மல்லன் பால் போக்கினான். அது பொறாது. ஆகவமல்லன் வந்து: எதிர்க்க, அப்போரிலும், இராசா திராசனே வெற்றி கொண்டு, சாளுக்கியர் தலைநகராம் கல்யாணபுரத்தையும் கைக் கொண்டு, ஆங்கேயே வீராபிடேகமும் செய்து கொண்டான். அம்மட்டோ, அப்போர் வெ ற்றியின் நினைவாக, அக்