பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. காலந்தோறும் தமிழகம் கல்யாணபுரத்திலிருந்து துவாரபாலர் படிமம் ஒன்றைக் கொண்டு வந்தான், "ஸ்வஸ்தி ரீ உடையார் பூரீ விஜய ராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடு வந்தது வார பாலர்' என்ற வரிகள் அப்படிமத்தில் இன்றும் காணப்படும். இராசாதி ராசன் பெற்ற இவ்வெற்றிகளைக். "கம்பிவிச் சயத் தம்பம் தட்டதும் கடியரன் கொன் கல்யாணர் கட்டறக் கிம்புரிப் பனைக் கிரியுகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும்...” எனக் கலிங்கத்துப் பரணியும், "மும்மடி போய்க் கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகனும்” என விக்கிரம சோழன் உலாவும் பாராட்டி உள்ளன. கல்யாணபுரம் கொண்டும் மனம் நிறைவு பெறாத இராசாதிராசன், கி. பி. 1054ல், மீண்டும் ஆகவமல்லனோடு போர் தொடுத்தான், இம்முறைப் படையெடுப்பில், அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரனும் உடன் சென்றான். கிருஷ்ணை ஆற்றங்கரைக் கொப்பத்தில் போர் நடை பெற்றது. படை முழுமையும் போரில் ஈடுபடுத்துவது நல்ல போர் முறையாகாது என்பதால், படையின் ஒரு பகுதியைத், தம்பி இராசேந்திரனோடு பாசறையிலேயே நிறுத்தி விட்டு, இராசா திராசன் போர்க்கள்ம் புரிந்தான். போரில் வெற்றித் திருமகள் தன்னை அணுகும் நிலையில், பகைவன் அம்பொன்றிற்கு இலக்காகி, இராசா திராசன், ஊர்ந்து சென்ற யானை மேல் இருந்தவாறே உயிர் துறந்தான்.