கர். கோவிந்தனார் - 129 செய்தி கேட்டு, இராசேந்திரன் போர்க்களம் புகுந்து ஆகவ மல்லன் படைகளையும், படைத்தலைவர்களையும் அறவே அழித்து விட்டான்; எனினும் ஆகவமல்லன் எவ்வாறோ தப்பித்துக் கொண்டான். சாளுக்கியர் விட்டுச் சென்ற எண்ணில்ாக் களிற்றுப் படையோடும், பிறவற் றோடும், தலைநகர் வந்து சேர்ந்தான் இராசேந்திரன் இப்போர்களின் பயனாய், 'கல்யாணபுரமும் கொல்லபுரமும் எறிந்து யானை மேல் துஞ்சின உடையார் விஜயராஜேந்திர தேவர்' என்ற புகழ் இராசா திராசனுக்கு கிடைத்தது ஒழிய, சாளுக்கியரை அறவே அழித்து விட்டனர் என்ற புகழ் சோழர்க்குக் கிடைத்திலது. இரண்டாம் இராசேந்திரன் கொப்பத்துப் போரில், சோழப் பேரரசன் இராசாதி ராசன் உயிரிழந்து போக, அப்போர்க் களத்திலேயே சோழப் பேரரசனாக முடி சூடிக் கொண்டு, "ஒரு களிற்றின்மேல் வருகளிற்றை யொத்து உவகுயக் கோளப் பொருது கொப்பையில் பொருகளத்திலே முடிகவித்தவன்' எனப் புகழ் கொண்ட இரண்டாம் இராசேந்திரன், தன் தமையன் உயிர் போக்கிய ஆகவமல்லனை அழிக்க வேண்டுவது தன் குலக் கடனாகும் எனக் கருதியிருந்தான். அதேபோல், ஆகவமல்லனும், கொப்பத்துப் போரில் பெற்ற தோல்வியால் ஆன அவமானத்தைத் துடைத்துக் கொள்வ தாயின், சோழர்களை முறியடித்தாக வேண்டும் என்ற மூடிவோடிருந்தான். அதன் பயனாய்க் கிருஷ்ண்ை ஆற்றங்கர்ை முடக் காற்றில் கடும் போர் நடைபெற்றது. கொப்பத்துப் போரில்தான் உடன் செல்லாமையினாலேயே தன் தமையன்
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
