பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - காலந்தோறும் தமிழகம் உயிர் இழக்கநேர்ந்தது என்பதை உணர்ந்திருந்தமையால், இம்முறை, இராசேந்திரன், தன் உடன் பிறப்புக்களாகிய இராசமகேந்திரன், வீர ராசேந்திரன் ஆகியோரையும் உடனழைத்துச் சென்றிருந்தான்; அதுபோலவே ஆகவ மல்லனும் அவன் மகன் விக்கிர மாதித்தனுடனும், படைத் தலைவர் பலரோடும் வந்து போரிட்டான். கடும் போர். நடைபெற்றது. சாளுக்கியர் படைத்தலைவர் பலரும் உயிரிழந்து போகச் சோழர்க்குப் பெரு வெற்றி கிட்டியது: எனினும், ஆகவமல்லனை இம்முறையும் அழிக்க முடிய வில்லை. அவனும், அவன் மகனும் புறங்காட்டி ஓடி விட்டனர். - - விரராசேந்திரன் முடக்காற்றுப் போரில் பிழைத்தோடிய ஆகவமல்லனும், அவன் மக்களும் வானா இருந்தனர் அல்லர்: சோழநாட்டில், வீரராசேந்திரன் முடிசூட்டு விழா மகிழ்ச்சியில் மூழ்கி யிருக்கும்போது, ஆகவமல்லனின் இரண்டாம் மகன் விக்கிர மாதித்தன் என்பவன், சோழர் ஆ. சிக்கு உட்பட்டதான கங்கபாடி நாட்டைக் கைப்பற்ற முனைந்தான். அஃதறிந்த வீரராசேந்திரன், பெரும் பட்ையுடன் சென்று போரிட்டு, மேலைச் சாளுக்கியர்களைத் துங்கபத்திரை ஆற்றுக்கு அப்பால் துரத்திவிட்டுத் தாயகம் திரும்பினான். - கீழைச் சாளுக்கியர்க்கு உரிய வேங்கிநாடு, சோழ நாட் டிற்கு வடபுல அரணாக விளங்குவதினாலேயே, சோழர்கள் வெற்றி நடைபேடுகிறார்கள்: ஆகவே, அச்சோழர்களை வெற்றி கொள்ள வேண்டுமாயின், முதற்கண், வேங்கி நாட்டை வென்று தன் நாட்டோடு இணைத்துக் கொள்ளு தல் வேண்டும் என உணர்ந்தான் ஆகவமல்லன்; அதனால் அது முடிக்குமாறு, சாமுண்டராயன் எனும் மாதண்ட நாயகனை வேங்கி மீது ஏவினான். அஃதறிந்தான் வீர ராசேந்திரன், வேங்கி நாட்டின் இன்றியமையாமையினை