பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - காலந்தோறும் தமிழகம் பாலை நாடும், ஏழ் பின்பாலைநாடும், ஏழ்குன்றநாடும். ஏழ்குணக்காரைநாடும், ஏழ்குறும் பனைநாடும், குமரி, கொல்லம் முதலாம் பன்மலைநாடும் உள்ளடக்கிய பாண்டி நாட்டின் பெரும்பகுதியும், கடுங்கோன் காலத்தில் கடல் கோளால் அழிவுற்றன. தெற்கண் தம்நாடு அழியக்கண்ட தென்னவனும், தென்னவன் நாட்டு மக்களும் சிறிது வடக்கே வந்து, கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந் தனர்; வெண்தேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக உள்ள வேந்தர் நாற்பத்தொன்பதின்மர் இருந்து அரசாண்ட கபாடபுரமும், குமரிக்குன்றும், பஃறுளியாறும் கடன் கோளால் பாழாயின. தென்திசைக்கண், நீண்டு பரந்திருந்த பாண்டிநாடு, இவ்வாறு பாழுற்றமையால், கபாடபுரத்தில் கடல்கோள் காலத்தில் இருந்து அரசாண்ட முடத்திருமாறன் தன்னாட்டின் மேற்கே நாடாண்டிருந்த சேரர்களையும், வடக்கே வாழ்ந்திருந்த சோழர்களையும் வென்று துரத்தித் தன்னாட்டை அடுத்திருந்த அவர் நாட்டு நிலங்களைக் கைப்பற்றிப், பாண்டியநாடு கடல்கோளால் இழந்த நிலக் குறையை நிறைவாக்கினான். தம் பழைய தலைநகரங்கள் இரண்டும், கடல்கோளால் பாழுற்றமை கண்ட பாண்டி’ நாட்டு மக்கள், நாடும், நகரமும் புதியவாகக் காணுங்கால், அவற்றிற்கு அத்தகைய கேடு மீண்டும் வராமை வேண்டும். என்பதில் பெரிதும் விழிப்பாயிருந்தனர். அன்று அவர்கள் கண்ட பாண்டியநாட்டின் புதிய தலைநகரே இன்றைய பழம்பெரும் நகராகிய மதுரை மாநகரம், நாடும் நகரமும் கடல்வாய்ப்படவே, கலங்கிய பாண்டிய மன்னன், வடதிசைக்கண் உள்ள மணலூர் வந்து தங்கினான்; ஆங்கிருந்தவாறே தலைநகர் அமைத்தற்குத் தகுதிவாய்ந்த இடத்தைத் தேர்ந்துகொண்டிருந்தான். அக்காலை அம்மனலூர் வணிகன் ஒருவன், மேற்கே உள்ள நாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிந்து, ஊர்நோக்கி மீண்டு.