பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 131 அவனும் உணர்த்தவனாதலின், உடனே வேங்கி நாடு நோக்கிப் புறப்பட்டு, சாளுக்கியர் படையை இடைவழி யிலேயே வழிமறித்துப் போரிட்டு அழித்தான். வேங்கி நாட்டு இடைவழியில், சாளுக்கியர் படை தோற்றுப் புதங்காட்டி விட்டதே ஒழிய, அது அடங்கி ஒடுங்கிவிடவில்லை; மாறாக, கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளும் கூடும். இ.மாகிய கூடல் சங்கமத்தில் பெரும்படையோடு பாடி கொண்டிருக்கும் ஆகவமல்ல னோடு இணைந்து கொண்டது; அது அறிந்த வீரராசேந் திரன், சாளுக்கியர் படையைக் கூடல் சங்கமத்தில் விட்டுச் செல்வது போர் முறையாகாது என உணர்ந்து, கூடல் சங்கமம் நோக்கிப் புறப்பட்டான். கடும் போர் நடை பெற்றது; வழக்கம் போல் இப்டோரிலும் ஆகவமல்லன் புறங்காட்டி விட்டான்; அவன் பாசறையில் விட்டுச் சென்ற பட்டத்து யானை முதலாம் பெரும் படைகளையும், பட்டத்து அரசியையும், பெரும் பொருளையும் கைக் கொண்டு, கங்கைகொண்ட சோழபுரம் அடைந்து விசயாபி டேகம் செய்து கொண்டான், - கூடல் சங்கமத்துப் பெற்ற வெற்றியைக் "குந்து ளரைக் கூடல் சங்கமத்து வென்ற கோன் - அபயன்' எனக் கலிங்கத்துப்பரண்கியும், - "கூடலார் சங்கமத்துக் கொள்ளும் தனிப் பரணிக்கு. எண்ணிறந்த தங்கமதயானை துணித்தோனும்' என விக்கிரம சோழன் உலாவும், - !. "பாடவரியபரணி, பாட்டணிiழ் கூடலார் சங்கமத்துக் கொண்ட கோன்' என இராசராச சோழன் உலாவும் பாராட்டியுள்ளன.