பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 காலந்தோறும் தமிழகம் வீரராசேத்திரனால், தன் படைத்தலைவர் பலரும் இறந்துபோக, தனக்குத் துணைவத்த கங்கன், காடவர் கோன், துளம்பன், வைதும்பராயன் போலும் அரசர்களும் உயிரிழந்து போக, தோல்வியுற்ற தன் செயல் தனக்குப் பெரிழிவு தருவதாகும்; பழியொ டு வாழ்வதிலும், போரிட் இச் சாவது சாலவும் நன்று என உணர்த்திருத்தான் ஆகவ மல்லன்; உடனே கூடல் சங்கமத்தில் தான் காத்திருப்பு தாகவும் தன்னோடு போரிட வரவேண்டுமென்றும், வாரா திருப்பவர் பேரரசர் அல்லர். பெரும்பழிப் புரட்டராவர்" என்றும் ஒரு திருமுகம் எழுதி, வீரராசேந்திரனுக்கு அனுப் பினான். திருமுகம் பெற்ற வீரராசேந்திரன், ஆகவமல்லன் விரும்பியவாறே, பெரும் படையுடன் கூடல் சங்கமம் அடைந்தான். ஆனால், அழைப்பு விடுத்த ஆகவமல்லன் வந்திலன். அதனால் சினங்கொண்ட சோழன், இரட்டபடி நாடு புகுந்து, ஆங்கிருந்த ஆகவமல்லனின் படைகளை அழித்தான்; ஆகவமல்லன் போல் ஒரு பதுமை செய்து, அதன் கழுத்தில், ஆகவமன்னனும், அவன் மக்களும் தனக்கு அஞ்சி ஐந்துமுறை புறங்காட்டி ஓடிய செய்தி பொறித்த ஒலையை அதன் மார்பில் தொங்கவிட்டு, வேங்கி நாடு நோக்கி வீரராசேந்திரன் தடத்தான். ஆகவமல்லன் உயிரிழந்த பின்னர், சாளுக்கிய இளவரசனாக முடிகுட்டிக் கொண்டு திக்குவிசயம் புறப்பட்ட அவன் மகன், விக்கிரமாதித்தன், வேங்கி நாட்டைக் கைப் பற்றிக் கொண்டு, கிருஷ்ணை ஆற்றங்கரையை அடைந்து, தன் தந்தைக் காண இறுதிக் கடன் ஆற்றிக் கொண்டிருந் தான். வேங்கி நாடு நோக்கி வந்து கொண்டிருந்த வீர ராசேந்திரன், அந்நாடு ஆகவமல்லன் மகன் கைப்பட்டது என அறிந்து, "வேங்கி நாட்டை மீட்காமல் மீளேன்: வல்லராகில் வந்து காக்க' என விக்கிரமாதித்தனுக்கு செய்தி போக்கிவிட்டு, வேங்கி நாடு நோக்கி விரைத்தான்: இடையில்