பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 133 விசயவாடையில் வந்து எதிர்த்த சாளுக்கியர் படையை அழித்து விட்டு, வேங்கி நாடு புகுந்து, ஆங்கிருந்த சாளுக்கியர் படையையும் வென்று துரத்தி விட்டு, வேங்கியை மீட்டு, அதைப் பண்டேபோல், கீழைச் சாளுக்கிய விசயாதித்தனிடம் ஒப்படைத்து வெற்றித் திருமகள் மணக்கத் தலைநகர் வத்து சேர்ந்தான். ஆகவமல்லனுக்குப் பிறகு, சாளுக்கியப் பேரரசனாக முடிசூட்டிக்கொண்ட சோமேசுவரன் அத்துணை நல்லவன் அல்லன். குந்தள நாட்டு மக்கள் அவன் ஆட்சியில் பெருந் தொல்லைக்கு உள்ளாயினர். அவன் தவறுகளை எடுத்துக் காட்டி, அவனை நல்வழிப்படுத்த முயன்ற அவன் தம்பி விக்கிரமாதித்தனை நாட்டை விட்டு வெளியேற்றினான்; சாளுக்கிய நாடு விட்டு வெளியேறிய விக்கிரமாதித்தன், தன் தம்பி சயசிம்மனையும் உடன் அழைத்துக் கொண்டு சோணாடு நோக்கிப் புறப்பட்டான். அஃது அறிந்தன் கடம்பர் குலமன்னன் சயகேசி? தமையனும் பகைவனாகி விட்ட நிலையில் சோழப் பேரரசைப் பகைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகாது; அவனோடு நட்புறவு கொள்வதே நன்று என விக்கிரமாதித்த னுக்கும், தன் குலப் பகைவர்களாம் சாளுக்கியர் பிளவு பட்டிருக்கும் போது, அவர்களுள் ஒருவரை நண்பனாக ஏற்றுக்கொள்வதே அரசியல் நெறியாகும் என வீர ராசேந்திரனுக்கும், அறிவுரை கூறி, அவர்களிடையே பகை யொழிந்து, நட்பு வளர வழி செய்தான் சயகேசி அதன் பயனாய், வீரராசேந்திரன் மகள், விக்கிரமாதித்த சாளுக்கி பனுக்கு மனம் செய்து தரப்பட்டாள்; இத்திருமணம் துங்கபத்திரைப் பேராற்றங்கரையிலேயே தெைபடற்றது. அதன் பின்னர், வீரராசேந்திர சோழன், இரட்டப்பாடி ஏழரை இலக்க நாட்டின் மீது படை எடுத்துச் சென்று சோமேசுவரனை வென்று துரத்திவிட்டு, அந்நாட்டை விக்கிரமாதித்த சாளுக்கியனுக்கு வழங்கினான்.