பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 காலந்தோறும் தமிழகம் முதலாம் குலோத்துங்கன் : வீரராசேந்திரனுக்குப் பிறகு, - சோழ அரியணையில் 音宾 அடிர்ந்த அவன் மகன் அதிராசேந்திரன், சில காலமே ஆட்சி புரிந்து, நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, ஜவனுக்கு மிகப் பேறின்மையால், கீழைச்சாளுக்கிய இராசேந்திரன், குலோத்துங்கன் என்னும் அபி.ேகப் பெயர் பூண்டு, சோணாட்டு அரச உரிமையைப் பெற்றான். தன். மாமன்மார்கன் மேலைச்சாளுக்கியர்களோடு ஒயாது போர் மேற்கொண்டதால், சோணாட்டு வனமும் குன்றியது; சோழ அரசிளங்குமாரர் சிலரும் உயிரிழக்க நேர்ந்தது; குந்தள நாட்டவர்க்கும் பேரிழப்பு நேர்ந்தது, என்றாலும், அவர் கிளை அறவே அழிக்க முடியவில்லை என்ற உண்மைகளை உணர்ந்து துங்கபத்திரை ஆற்றிற்கு வடக்கே, சோழப் பேரரசை நிலைநாட்ட வேண்டும் என்ற பேராசையைக் குலோத்துங்கன் கைவிட்டான். அதனால், மேலைச் சாளுக்கியரோடு, போராடும் நிலைமை அவனுக்கு உண்டாக வில்லை. - ஆனால், மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் வேறு வகையில் சிந்திக்கத் தொடங்கினான். சோழர் குடியில், அரியணையில் அமரத்தக்க அரசிளங்குமரன் ஒருவனும் இல்லாமல் போய்விட்டான் என்பதால், அது கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்த ஒருவனைச் சென்று அடைதல் முறையாகாது என எண்ணினான். கீழைச்சாளுக்கிய இராசேந்திரன் சோழர்குலப் பெண்ணை மணந்து கொண்ட தால் அவனுக்கு அவ்வுரிமை உண்டு எனக் கூறப்படுமானால் தானும் ஒரு சோழர்குலப் பெண்ணை மணந்திருப்பதால், அவ்வுரிமை தனக்கும் உண்டு என எண்ணினான். அதனால், குலோத்துங்கன் பால் அவனுக்கு வெறுப்பு வளர்ந்தது. மேலும், வேங்கிநாடும், சோணாடும் ஓர் ஆட்சிக்கீழ் வருவதையும் அவன் விரும்பவில்லை. அதனால், சோழt