பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . - 135 பெரும்படையைத் தாக்கி அழிக்குமளவு தன் படைவலியைப் பெருக்கும் பணிகளை மேற்கொண்டான். அஃதறிந்தான் குலோத்துங்கன்; விக்கிரமாதித்தன் தமையனாகிய சோமேசுவரன்,தம்பியோடு பகைகொண்டுள்ளான் என்பதை அறிந்திருந்த குலோத்துங்கன், அவனைத் தன் நண்ப னாக்கிக் கொண்டான். இனியும் வாளா இருப்பின், சோழர் படை அழிக்கலாக ஆற்றல் பெற்றுவிடும் என அஞ்சிய விக்கிரமாதித்தன், குலோத்துங்கன் மீது போர்தொடுத்து விட்டான். முதல் நடவடிக்கையாகக் குலோத்துங் கனுக்குத் துணை நின்ற தன் தமையனைவென்று அவன் ஆண்டு கொண்டிருந்த நாட்டை அகப்படுத்திக் கொண்டான். - சோழர் படையும் வடநாடு நோக்கிப் புறப்பட்டது; நங்கிலி, மனலூர், அளத்தி, நவிலை முதலான இடங்களில் கடும்போர் நடைபெற்றது. இறுதியில் குலோத்துங்கனே வெற்றி பெற்றான். விக்கிரமாதித்தன் துங்கபத்திரை ஆற்றுக்கப்பால் துரத்தப்பட்டான். சாளுக்கியப்படையைச் சேர்ந்த ஆயிரம் யானைகளையும், எண்ணிறந்த செல்வங் களையும் கைக் கொண்டு. கங்கை கொண்ட சோழபுரம் திரும்பியது சோழர்படை. "தளத்தொடும் பொருதண்டெழப் பண்டொர் நாள் அளத்திபட்டது அறிந்திலை ஐய நீ" "தண்டநாயகர் காக்கும் நவிலையில் கொண்ட ஆயிரம் குஞ்சரம் அல்லவோ" என, இப்போர் வெற்றிகளைப் புகழ்ந்து பாராட்டுகிறது. கலிங்கத்துப்பரணி -