பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ. சோழர்-வேங்கிச் சாளுக்கியர் உறவு மேலைச்சாளுக்கியரின் தாயத்தினரான கீழைச் சாளுக்கியர், கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறு களுக்கும் இடைப்பட்ட வேங்கிநாட்டை ஆண்டு வந்தனர், கி. பி. பத்தாம் நூற்றாண்டின் நடுவில், அக்கீழைச் சாளுக்கியரிடையே அரசுரிமை காரணமாகப் (3l utrti நிகழ்ந்தது. மூத்தோன் வழியினனாகிய இரண்டாம் அம்மராசன் (கி. பி. 905-970) ஆண்டு கொண்டிருந்தான். இளையோன் வழியின்னாகிய பாடபன் என்பவன், இராஷ் டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் துணையோடு உள் நாட்டில் கலகம் செய்து. ஒரு பகுதியைக் கவர்ந்து ஆளத் தொடங்கினான். வேங்கிநாட்டின் எஞ்சிய பகுதியை அம்மராசனும், அவனுக்குப் பின்னர், அவன் மாற்றாந்தாயின் மகனாகிய தானானவன் என்பானும் கி. பி. 973 வரை அரசாண்டு வந்தனர். இளையோன் வழியினரர்கிய பாடபனும், அவன் தம்பி தாழனும் கி. பி. 973இல் வேங்கிநாடு முழுமையும் கைக்கொண்டு ஆளத்தொடங்கினர். நாட்டை விட்டு வெளியேறிக் கரந்துறை வாழ்க்கை மேற்கொண்ட, அம்மராசன் வழியில் வந்த சக்திவர்மன் என்பவன் சோழ நாடு புகுந்து முதலாம் இராசராசன் பால் அடைக்கலம் புகுந்தான்.