பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ff. கோவிந்தனார். 137 சோணாட்டில் தங்கியிருந்த சக்திவர்மன், தெலுங்குச் சோழ மன்னன் வீமனுக்குரிய சீட்புலிநாடு, பாசி நாடுகளை வென்று அடக்க இராசராசசோழன் மேற்கொண்ட போரில், சோழர்படையுடன் சென்று, பெரும்போர் ஆற்றிச்சோழர் வெற்றிக்குத் துணைபுரிந்தான். சக்திவர்மன் ஆற்றிய அப்போர்பணியால் அகமகிழ்ந்து, அவன் பால் அன்பு கோண்ட இராசராசன். வேங்கி நாட்டின் மீது படை யெடுத்துச்சென்று, இளையோன் வழியினரை வென்று, வேங்கிநாட்டு அரசுரிமையை சக்திவர்மன்பால் ஒப்படைத் தான். மேலும், சக்திவர்மன் தம்பி, விமலாதித்தனுக்குத் தன் மகள் குந்தவையை மணம் செய்து கொடுத்தான். இராசராசன் காலத்தில் ஏற்பட்ட சோழர்-சாளுக்கியர் திருமணத் தொடர்பு கங்கை கொண்ட சோழன் எனும் முதல் இராசேந்திரன் காலத்திலும் நீடித்தது. அவன் தன் மகள் அம்மங்கை தேவியை கீழைச் சாளுக்கிய விமலாதித்த னுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத் தான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலத்தில் குலோத்துங்கன் எனும் பெயரோடு சோழர் அரியணையில் அமர்ந்தான். - - சோழர்குலச் செல்வியர், வேங்கிச் சாளுக்கிய மன்னர்க்கு மணம் செய்து கொடுக்கும் இம்முறை இரண் டாம் இராசேந்திரன் காலத்தும் உயிர் பெற்றுத் திகழ்ந்தது. கீழைச் சாளுக்கிய இராசராச நரேந்திரனுக்கும் கங்கை கொண்ட சோழன் மகள் அம்மங்கை தேவிக்கும் பிறந்தவ னும் பிற்காலத்தே குலோத்துங்கன் எனும் பட்டப் பெய ரோடு சோழர் அரியணையில் அமர்ந்தோனுமாகிய கீழைச் சாளுக்கிய இராசேந்திரனுக்கு இரண்டாம் இராசேந்திர சோழன் தன் மகள் மதுராந்தகியை மணம் செய்து மகிழ்ந் தான். கா தமி--9