பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காலந்தோறும் தமிழகம் சோழப் பேரரசு வீறுநடை போட்டு நடைபெறுவது காணப் பொறாதவர்கள் மேலைச் சாளுக்கியர். அப் பேரரசை அடக்கி ஆள வேண்டும் எனப் பலமுறை முயன்றும் தோல்வி கண்டவர்கள் சோழப் பேரரசுக்குத் துணையாக வேங்கி நாட்டுக் கீழைச் சாளுக்கியர் இருக்கும் வரை தம் எண்ணம் கைகூடாது என்பதை உணர்ந்தனர். அதனால் வேங்கி நாட்டை வென்று ஒன்றாக்கிக் கொள்ளக் கருதினர். அதற்கேற்ற காலமும் வாய்த்தது. கீழைச் சாளுக்கிய மன்னனும், கங்கை கொண்ட சோழன் மருமகனுமான இராச ராச நரேந்திரன் இறந்து விட்டான். அதுவே ஏற்புடைய காலம் எனக் கொண்ட மேலைச் சாளுக்கிய ஆகவமல்லன் தன் படைத் தலைவன் ஒருவனை வேங்கி நாட்டிற்கு அனுப்பினான்: அஃதறிந்த வீரராசேந்திர சோழன் தானும் வேங்கி நாடு சென்று மேலைச் சாளுக்கிய தண்ட நாயகனைக் கொன்று வேங்கி நாட்டைக் காத்தான். மேலைச் சாளுக்கிய நாட்டையும், கீழைச் சாளுக்கிய நாட்டையும் ஒன்று இணைக்கும் பணி இவ்வாறு தடையுற்றது என்பதால் தளர்ந்து விடாது மேலைச் சாளுக்கிய ஆகவமல்லன் முன்னினும் பெரிய படை யொன்றை வேங்கி நாட்டிற்கு அனுப்பினான். சோழர் படை வருகைக்கு முன்னர் விரைந்து சென்று வேங்கியைக் கைப் பற்றிக் கொண்டது ஆகவமல்லன் படை இராசராச நரேந் திரன் மறைவுக்குப் பின்னர் வேங்கி நாட்டை ஆண்டு கொண் டிருந்த விசயாதித்தன் சோணாடு புகுந்து வீரராசேந்திர விடம் அடைக்கலம் புகுந்தான். அஃதறிந்து கடுஞ்சினம் கொண்ட வீரராசேந்திரன் "தான் கைக் கொண்ட வேங்கி நன்னாடு மீட்டுக் கொண்டலால் மீள்கிவம் கேட்டு நீ வல்ல னாகில் வந்து காக்கென்று’ ஆகவமல்லனுக்கு ஒலை போக்கி வேங்கி நாடு நோக்கி விரைந்தான். வந்து தடுத்த ஆகவமல்லுன் படையைக் கிருஷ்ணை ஆற்றங் கரையில் விசயவாடையில் வென்று அழித்துவிட்டு வேங்கி நாட்டை