பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 139 மீண்டும் கைக் கொண்டு அதன் ஆட்சிப் பொறுப்பை விசயாதித்தன் பால் ஒப்படைத்து சோனாடு திரும்பினான் வீர ராசேந்திரன். . வேங்கியை விசயாதித் தன் ஆண்டு கொண்டிருக்க சோணாட்டில் தன் தாய்ப் பாட்டன் அரண்மனையில் வளர்ந்து வந்த குலோத்துங்கன் வீர ராசேந்திர சோழன் மேற்கொண்ட மேலைச் சாளுக்கிய போர்களில் பங்கு கொண்டும், கடாரத்தரசனுக்குத் துணையாகச் சென்ற சோழ படைக்குத் தலைமை வகித்தும் சோணாட்டு அரசியலில் பெரும் பங்கு கொண்டு வாழ்ந்திருந்தான், தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில், வேங்கி நாட்டின் இளவரசாகப் பட்டம் கட்டப் பெற்று, குலமரபுப்படி, விஷ்ணுவர்த்தனன் எனும் அபிடேகப் பெயரும் சூட்டப் பெற்றிருந்தும், கீழைச் சாளுக்கிய அரசை அழித்துவிட மேலைச் சாளுக்கியர் முனைந்து செயலாற்றிக் கொண்டி ருக்கும் சமயம், தன் சிறிய தந்தையையும் பகைத்துக் கொள்வது அரசியல் அறிவுடைமையாகாது என்ற உயர்ந்த ராஜ தந்திரம் அறிந்திருந்தமையால், வேங்கி நாடு விடுதலை அடையத் தன் தாய் மாமனே துணை புரிந்திருக்கவும், வேங்கி நாட்டு ஆட்சிப் பொறுப்பினைத் தான் ஏற்றுக் கொள்ளாது தன் சிறிய தந்தை விசயாதித்தனே அது பெற விடுத்துச் சோணாடு வந்து வாழலாயினன் . - வேங்கி நாட்டு நிலைமை இதுவாக, சோணாட்டில் வீரராசேந்திரனுக்குப் பிறகு, அரியணை ஏறிய அவன் மகன் அதிராசேந்திரன் சில திங்களே ஆட்சி புரிந்து, நோய் வாய்ப்பட்டு, கி.பி. 1070ல் இறந்தான், அவனுக்கு மகப் பேறு இன்மையாலும், சோழர் மரபில் வேறு அரச குமரன் ஒருவனும் இன்மையாலும், சோணாடு ஆளும் அரசனைப் பெறமாட்டாது போயிற்று. நாட்டின் அகத்திலும் புறத் திலும் கலகமும், குழப்பமும் எழுந்தன. சோணாட்டு