பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 காலந்தோறும் தமிழகம் மக்கள் அமைதி இழந்து அல்லல் உற்றனர். அப்போது வடபுலப் போரில் ஈடுபட்டிருந்த குலோத்துங்கன் அறிந்து, உடனே சோணாட்டிற்கு விரைந்தான். சோணாட்டு அமைச்சர் முதலாம் அரசியல் தலைவர்கள் அவனை வரவேற்று, சோணாட்டு அரசனாக்கினர். இவ்வகையால் சோணாடும் வேங்கி நாடும் இரண்டறக் கலந்து ஒன்றாயின. தன் சிறிய தந்தையாகிய விசயாதித்தன் உயிரோடி ருக்கும் வரை, வேங்கி நாட்டு ஆட்சியை. அவன்பால் ஒப்படைத்திருந்தான்: குலோத்துங்கன், விசயாதித்தன் இறந்த பிறகு, வெங்கி நாட்டு ஆட்சிப் பொறுப்பினை இராசராச மும்மடிச் சோழன், வீரசோழன், இராசராச சோழ கங்கன், விக்கிரம சோழன் என்ற குலோத்துங்கன் மக்கள் நால்வரும், ஒருவர் பின் ஒருவராக ஏற்று, வேங்கி நாட்டைக் காத்து வந்தனர். விக்கிரம சோழன், சோனட்டின் இளவரசனாகப் பட்டம் சூடிப் பொறுப்பேற்றுக் கொள்வான் வேண்டி, சோணாடு திரும்பியதும், மேலைச் சாளுக்கிய விக்கிர மாதித்தன், வேங்கி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். வேங்கி நாடு சில காலம், மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்கீழ் இருந்தது! விக்கிரம சோழன். ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதும், வேங்கி நாடு சென்று, ஆங்கு ஆட்சி புரிந்து கொண்டிருந்த மேலைச் சாளுக்கியரை வென்று ஒட்டி விட்டு, வேங்கி நாட்டில், மீண்டும் சோழர் ஆட்சி நிலவச் செய்தான்.