பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 13 வருவனாயினன். அவ்வாறு மீண்டு வருங்கால், மணலூரை அடையச் சிறிது தொலைவே இருந்த அளவில் ஞாயிறு மறைந்து இரவு வந்துறவே மேற்கொண்டு செல்லமாட்டாது அங்கேயே தங்கினான். அவ்வாறு அவன் தங்கிய இடம், கடம்பமரங்கள் நிறைந்த ஒரு காடு; அக்காட்டில் தன் வாணிக வளத்தோடு தங்குவதற்கு வாய்ப்புடைய இடம் தேடித் தங்கிய வணிகன், தன் மாலைக் கடனாற்று முன்னர், மாசுபோக நீராடுதற்கேற்ற நீர்திலை தேடித் திரியுங்கால், அக்காட்டின் ஒருபால், ஒரு பொய்கையும். அப்பொய்கைக் கரையில் ஒரு சிவலிங்கமும் இருக்கக் கண்டான். பொய்கையில் நீராடி இறைவனை வழிபட்டு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும், பொய்கை இருக்கும் இடம் சென்று உற்று நோக்க, பொய்கை பொன்னிறத்தாமரை மலர்ந்து மணம் கமழவும், பொய்கைக் கரைக்கண் இருக்கும் இறைவன் திருவுருவம், செடிகளாலும் கொடிகளாலும் மறைப்புண்டு கிடக்கவும் கண்டான். மீண்டும் ஒரு முறை அவ்விறைவனை வணங்கி வாணிகப்பொருள்களோடு மணலூர் வந்துசேர்ந்தான். ஊர் அடைந்த வணிகன், தலைநகர் அமைக்கும் தகுதிவாய்ந்த இடம் காணாது கலங்கி நிற்கும் மன்னவன்பால் சென்று, இரவுதான் தங்கிய கடம்.:வனம், ஆங்குள்ள பொய்கை, பொய்கைக்கரையில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் திருவுருவம் ஆகியன குறித்து அறிவித்தான். அளிகன் கூறியன கேட். வேந்தன். தன் அமைச்சர் உடன்வரக், ம்பவனம் சென்று அவற்றைக் கண்டான். அவ்விடம் கடலுக்கு மேற்கில், இக்கடல்நீர் எளிதில் புமைாட்டாத் தொலைவில் இருப்பதாலும், திருக்குளமும் திருக்கோயிலும், அவ்விடம் பண்டு ஒரு பெருநகரின் இருப்பிடமாம் என்பதை அறிவிப்பதாலும், அக்கடம்பவனக்காடு, தலைநகர் அமைப் பிற்குத் தகுதிவாய்ந்த இடமாம் எனத் துணிந்தான்.

o