பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்-இராட்டிரகூடர் உறவு விஜயாலயன், தஞ்சைண்யக் கைப்பற்றிச் சோழப் பேரரசை நிறுவுவதற்கு முன்னரே, இராட்டிரகூடர் நோக்கு தமிழகத்தின் மீது வீழ்ந்திருந்தது; நந்திவர்ம பல்லவன் காலத்திலேயே, இராட்டிரகூடர்கள் காஞ்சியைக் கைப் பற்றிக்கொண்டனர்; இர்ாட்டிரகூடர் குலத்தில் வந்த ரேவா என்ற பெண்ணை மணந்து கொண்டதன் மூல மாகவே, நந்திவர்மபல்லவன், காஞ்சி உரிமையை மீண்டும் பேற முடிந்தது. தமிழ்நாடு ஆளும் அரசர்களுக்குத் தம் குலமகளிரை மணம் செய்து கொடுப்பதன் மூலம் தமிழகத்து உறவினைப் பெறும் முறையினைப் பல்லவர் காலத்திலேயே அறிந் திருந்த இராட்டிரகூடர்கள், தமிழகத்தில் பல்லவர் ஆற்றலைக் குன்றிச் செய்து, தம் பழம் பேரரசை நிலை நாட்ட முனைந்து நிற்கும் சோழர் உறவைப் பெறுவதிலும் அம்மண முறையினையே கையாண்டனர்; பல்லவரையும், பாண்டியரையும் வலி இழக்கப் பண்ணிச் சோழப் பேரரசு கண்ட, முதலாம் ஆதித்தனுக்கு இராட்டிரகூட இரண்டாம் கிருஷ்ணதேவன், தன் மகள் இளங்கோப்பிச்சியை மணம் செய்து கொடுத்தான், . ஆதித்தனுக்குப் பின்னர், சோழர் அரியணை ஏறிய முதற் பராந்தகன் காலத்திலும், அத்தகைய திருமண உறவு ஏற்பட்டது. பராந்தகன் தன் மகள் வீரமாதேவியை,