பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - காலந்தோறும் தமிழகம் இராட்டிரகூடர் இரண்டாம் கிருஷ்ணனின் இரு பேரன்களில் ஒரு பேரனாகிய மூன்றாம் இந்திரன் மகள் கோவிந்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால், இம் மணமுறை யினால், சோழர்-இராட்டிரகூடர் நட்புறவு ஏற்படுவதற்கு மாறாக, இருவரிடையே பெரும்பகை வளர்ந்துவிட்டது. பராந்தகன் மருமகன் கோவிந்தனின் சிற்றப்பனாகிய அமோகவர்ஷன் என்பான், கோவிந்தனை விரட்டிவிட்டு, இராட்டிரகூட அரசனாகி விட்டான்; கோவிந்தன்தன்வீரபா தேவியோடு, சோணாடு வந்து சேர்ந்தான்; மகளுக்கும், மருமகனுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பழிவாங்க எண்ணினான் பராந்தகன். இந்நிலையில் அமோகவர்ஷன் இறந்துவிட்டான்; இராட்டிரகூடரை வெல்ல அதுவே. ஏற்புடைக்காலமாம் என எண்ணிப் பெரிய சோழர் படை ஒன்றைத் துணையாக அளித்து மருமகனை இரட்டிரகூடத் தின் மீது ஏவினான்; அப்போது அரியணை ஏறி இருந்த அமோகவர்டிைன் மகன் மூன்றாம் கிருஷ்ணன் சோழர் படை ளையும், அது துணையாக வந்த கோவிந்தனையும் வென்று. துரத்தினான். இதற்கிடையில், சோழப்பேரரசு காணவேண்டும் என்ற பெருவேட்கையால், சோனாட்டின் வடபுலத்தே கோலோச்சி யிருந்த வாணர்களையும், வைதும்பர்களையும் வென்று, வான-வைதும்ப நாடுகளைத் தனதாக்கிக் கொண்டான் பராந்தகன். தம் நாடுகளைப் பராந்தகனிடம் பறிகொடுத்த வான-வைதும்பர்கள்,பராந்தகனின் பகைவனாம் இராட்டிர கூட மூன்றாம் கிருஷ்ணனின்பால் அடைக்கலம் புகுந்தனர். த ன் னை அழித்துவிட்டுத், தன் குலத்துவந்த கோவித்தனை அரியணையில் அமர்த்த முனைந்தவனே பராந்தகன் எனும் நினைவால், அப்பராந்தகன்பால் கடுஞ் னேங்கொண்டிருந்த மூன்றாம் கிருஷ்ணனுக்குத், தன்னிடம் அடைக்கலம் புகுந்த வான-வைதும்பர்களைக் காக்க