பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 143 வேண்டுவது தன் கடமை என்ற உணர்வும் உண்டாகவே, தமிழகத்தின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாயினான். அஃது அறிந்த பராந்தகனும், தன் மகன் இராசாதித்தன் தனிமையில் திருநாவலூரில், ஒரு பெரும் படையை நிறுத்தி வைத்தான். இராட்டிரகூடன் வாணரும், வைதும்பரும் துணைவரத்தமிழகத்துள் புகுந்து விட்டான். தக்கோலத்தில் பெரும்போர் மூண்டது; சோழர்படை வீறு கொண்டு போரிட்டது என்றாலும், இராட்டிரகூடனுக்குத் துணை யாக, வாண-வைதும்பருடன் வந்தகங்கமன்னன் ஏவிய அம்பு ஒன்று, யானை மேல் அமர்ந்து அமர் புரிந்து கொண்டிருந்த இராசாதித்தன் மார்பில் பாய்ந்து அவன் உயிர் குடித்து விடவே, சோழர் படை தோற்றுப் பின்வாங்கிற்று. - யானை மேல் இருந்த நிலையிலேயே இறந்துவிட்டமை யால், இராசாதித்தன், “ஆனை மேல் துஞ்சிய தேவன்" என அழைக்கப்பட்டான். தொண்டைநாடும், திருமுனைப்பாடி தாடும் இராட்டிரகூடர் வசமாயின; இராட்டிரகூட மன்னன், அந்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை தனக்குப் படைத்துணை யாக வந்த வைதும்பர் பால் ஒப்படைத்துத் தன் நாடு அடைந்தான். - தான் கண்ட பேரரசின் எல்லை, தன் வாழ்நாளிலேயே அழிந்துவிட்டதை எண்ணி எண்ணி இறந்துபோனான் பராந்தகன். அவனுக்குப் பிறகு அரியணை அமர்ந்த கண்ட ராதித்தன் காலத்தில் ஏதும் நடைபெறவில்லை. கண்ட ராதித்தனுக்குப் பிறகு, பராந்தகனின் மூன்றாம் மகன் அரிஞ்சயன் ஆட்சிப்பீடம் ஏறினான். த்ன் தந்தை இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றவேண்டியது தன் கடமை என உணர்ந்தான்; ஒரு பக்கம் தன் படை வலிமையைப் பெருக் கினான். மறு பக்கம் தன் மகளை, வாணர்குலத்து