பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காலந்தோறும் தமிழகம் இளவரசன் ஒருவனுக்கு மணம் செய்துகொடுத்ததன் மூலம் வாணரை இராட்டிரகூடரிடமிருந்து பிரித்துப் பகைப்படை ஆற்றலைக் குன்றச் செப்தான்; இச்செயல்களால், இராட்டிரகூடர்களை வென்றுவிடலாம் என்ற துணிவு பிறக்கவே, இராட்டிரகூடர் மீது போர் தொடுத்தான். வடஆர்க்காடு பகுதி ஆற்றுாரில் கடும்போர் நடைபெற்றது. போரில் அரிஞ்சயன் இறந்தான்; ஆற்றுாரில் இறந்தமையால் அவன், "ஆற்றுார்த் துஞ்சிய தேவன்” என அழைக்கப் பட்டான். இவன் பெயரனான இராசராசன் இவன் நினைவாக, மேல் மாடியில் ஒரு கோயில் எடுத்தான்.