பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. சோழர் அரசியல் தஞ்சை, திருச்சி மாவட்டங்களும், தென்ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியும், புதுக்கோட்டை நாட்டின் ஒரு பகுதியும் உள்ளடங்கிய நிலப்பரப்பே பொதுவாக சோழமண்டலம் என அழைக்கப்படும். என்றாலும், அதன் பரப்பு, சிற்சில காலங்களில், ஆளும் அரசர் ஆற்றலுக்கு ஏற்ப, இவ்வெல்லைகளுக்கு அப்பாலும் பரவி, வடக்கே தொண்டைநாட்டையும், தெற்கே பாண்டி நாட்டையும், மேற்கே சேர நாட்டையும் உள்ளடக்கிய பெருநிலப்பரப் பாகவும் அது திகழ்ந்தது. - சோழ நாடு, ஆட்சி அமைதி கருதிப் பல மண்டலங் களாவும், மண்டலம் ஒவ்வொன்றும் பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாம் இராசராசன் காலத்தில், சோழ நாடு ஒன்பது மண்டலங் களாகப் பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும், அவனுக்குரிய இயற்பெயர், பட்டப்பெயர்களைத் தாங்கி இருந்தன. அதுபோலவே சோழ மண்டலம், ஒன்பது வளநாடுகளாகப் பிரிந்திருந்தது: சயங்கொண்ட சோழமண்டலம் என வழங்கப்பட்ட தொண்டை மண்டலம் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அரசுரிமை . - சோழநாட்டு அரசுரிமை, தந்தை மகனுக்கு அளிக்க வழிவழித் தொடர்ந்து வருவதாகும். மக்கட்பேறின்றி