பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - காலத்தோறும் தமிழகம் மன்னர் இறந்தபோதும், ஆளும் மன்னர்க்கு, மகன், ஆளும் தகுதியில்லாதவனாகிவிட்டபோதும், மன்னனின் உடன் பிறந்தான் அரசுரிமை பெறுவதும் உண்டு. மக்கள் பலரா யினும் முதல் மகனுக்கே ஆட்சி உரிமை உண்டு; அரசர்கள் தாம் ஆண்டு கொண்டிருக்கும்போதே, மகனுக்கு இளவரசு பட்டம் கட்டி ஆட்சியில் பயிற்சி அளித்து வந்தனர். அமைச்சர் சோழர் ஆட்சி, தனி மனிதக் கோவாட்சியே எனினும், அரசன், அமைச்சர் உள்ளிட்ட பலர் அறிவுரை கேட்டே ஆட்சி புரிந்து வந்தான். முதல் அமைச்சர். அவர் கீழ் பணிபுரியும் அமைச்சர்கள் என அமைச்சர் குழுவில் பலர் இருந்தனர் என்பது, "அவன் இருந்துழி அறிக என்றனன் அபயன் மந்திரி முதல்வனே” என்ற கலிங்கத்துப்பரணி தொடரால் அறியலாம். - உடன் கடட்டம் அமைச்சர்களே அல்லாமல், அரசன் செல்லும் இடத் தோறும் உடன் சென்று, அவனுக்கு உசாத் துணையாக அறிவுரை வழங்குவார் சிலரும் இருந்தனர்; அவர்கள் உடன்கூட்டத்து அதிகாரிகள் எனப்பட்டனர். அவர்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்ப பெருந்தனம், சிறுதனம் என அழைக்கப்பட்டனர். தலைநகரில் அமைச்சர்களே அல்லாமல், சாமந்தர், திருமந்திர ஒலை, திருமந்திர ஒலை நாயகம், விடையில் அதிகாரி, கரும அதிகாரி, என்ற வேறு பிற அலுவலர்களும் இருந்தனர். இவர்களுள், சாமந்தர் நாற்படைத் தலைவ ராவர். அரசன். அவ்வப்போது அளிக்கும் ஆணைகளை நேரில் கேட்டு ஒலையில் எழுதுவார் திருமந்திர ஓலை: