பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.காவிந்தனார் I47 அவர் எழுதியதைச் சரிபார்த்துக் கையொப்பம் இடுவார். திருமந்திர ஒலை நாயகம்: அரச ஆணை அடங்கிய திருமுகங் களை உரியவர்களுக்குப் பணி மக்கள் மூலம் சேர்ப்பிப்பவர் விடையில் அதிகாரி; அரசின் பல்வேறு துறைகளிலும் நிகழும் நிகழ்ச்சிகளை ஆராய்ந்து ஒழுங்கு செய்பவர் கரும அதிகாரி. இவர்களே அல்லாமல், நாட்டில் களவும், கலக மும், கொலையும், கொள்ளையும் நிகழாவாறு காக்கும் காவல்துறை தலைவனாம் நாடுகாவல் அதிகாரியும் தலை நகரில் இருந்தான். புரவுவரித் திணைக்களம் "உறு பொருளும், உல்கு பொருளும், ஒன்னார்த் தெறு பொருளும் வேந்தன் பொருள்” என வள்ளுவர் கூறியவாறு, அரசன் வருவாயுள் பெரும்பகுதி வரியே ஆதலின், அத்துறை, சோழர் அரசியலில் பெரும்பங்கு பெற்றிருந்தது. விளைநிலங்களை அளந்து, தரம் இட்டு, அவற்றிற்குரிய வரிகளை விதித்து, அவற்றை வாங்கும் பொருட்டு, அப்பல்வேறு பணிகளையும் புரியும் பல்வேறு துறைத் தலைவர்களைக் கொண்ட நிலவரிக் கழகம் ஒவ்வொரு மண்டலத்திலும் இடம்பெற்றிருந்தது. அது புரவுவரித் திணைக்களம் எனவும், அதன் உறுப்பினர்கள் புரவுவரித் திணைக்களத்தார் எனவும் வழங்கப்பட்டனர். இக்கழகத்தின் தலைவர், புரவுவரித் திணைக்கள நாயகம்; ஊர் தோறும் சென்று. நிலவரிக் கணக்குகளை மேற்பார்த்து வருபவன் புரவுவரித் திணைக்களத்துக் கண்காணி; ஒவ் வொரு ஊரிலிருந்தும் அரசுக்கு வரவேண்டிய வரி இவ்வளவு என்பதைத் தெளிவாக எழுதி வைத்திருக்கும் புத்தகம், "வரிப் பொத்தகம்”. அப்புத்தகம் எழுதுபவனும் "வரிப் பொத்தகம்' என்றே அழைக்கப்படுவன். வரி பற்றி அவ்வப் போது ஏற்படும் மாறுதல்களைக் குறித்து வைப்பவன்