பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ. பழைய தமிழகத்தில் மக்களாட்சி ஒரு காலத்தில் உலகெங்கும் நிலவி இருந்த முடியாட்சி முறை மெல்ல மெல்ல மறைந்து போக, இப்போது மக்களாட்சி முறை இடம் பெற்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஆட்சி முறை யாகக் காணப்படும் இம்மக்களாட்சி முறை தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது. அக் காலத்தில், நாட்டில் முடியாட்சியே நிலவியிருந்தது என்றாலும், சிற்றுார் பேரூர்களில் குடியாட்சி முறையே இடம் பெற்றிருந்தது. ஊர் மக்களால் முறையாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவையே அவ் ஆர்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தது. அவ்வூருக் கான ஆட்சி முறை பற்றிய விதிமுறைகளை வகுப்பது, அவற்றைச் செயல்படுத்துவது. உடைமை குறித்தோ, ஊறு விளைவித்தமை குறித்தோ-எழும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்குவது, அதைச் செயல்படுத்துவது ஆகிய அனைத் தையும் அவ்வூர்ச் சபையே மேற்கொண்டிருந்தது. அத்தகைய ஊர்ச்சபைகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டன! அவற்றின் பால் அளிக்கப்பட்டிருந்த பொறுப்புக் கள் யாவை என்பன பற்றிய விரிவான விளக்கம், காஞ்சி புரத்திற்கு 30 கி. மீ. தொலைவில் உள்ள உத்திரமேரூரில் உள்ள பெருமாள் கோயில் மதில் சுவற்றில், கி. பி. பத்தாம்