பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காலந்தோறும் தமிழகம் நூற்றாண்டில், தமிழகத்தில் அரசோசியிருந்த சோழப் பேரரசு காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டில் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. முப்பது குடும்பு (வார்டு)களைக் கொண்ட பெரிய ஊர் அது குடும்பிற்கு ஒருவர் வீதம் முப்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தந்தக் குடும்பிற்கு உரிய உறுப்பினர் அந்தந்த குடும்பிலிருந்தே தேர்ந்தெடுக்கப் பட்டனர். தேர்வு நடைபெறும் நாளும், காலமும், இடமும், சில நாட்கள் முன்கூட்டியே பறையறைந்து அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்குத் தகுதி, தகுதி இன்மைகள் விரிவாக வகுக்கப்பட்டிருந்தன. தகுதிகள் வருமாறு 1. முப்பந்தைந்து வயதுக்கு மேல் எழுபது வயதுக்கு உட்பட்டவன். - 2. கால் நிலத்துக்கு மேல் விளை நிலமும், சொந்தத்தில் வீடும் உடையவன். 3. வேத நூல் அறிந்தவன். 4. அரைக்கால் நிலமே உடையவனாயின், நாலு வேதத் திலும், நான்கு பாஷ்யங்களிலும் விரிந்த அறிவும், விரித்துரைக்க வல்ல நாவளமும் உடையவன். 5. இவற்றோடு, மனம், மொழி, மெய் தூய்மையும் செயல் திறமும் உடையவன். . 3.