பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காலந்தோறும் தமிழகம் தலைநகர் அமைக்கும் பணி உடனே தொடங்கப் பெற்றது; மரங்கள் அழிக்கப்பட்டன: மண் செப்பம் செய்யப்பட்டது, இறைவன் திருவுருவம் இருக்கும் இடத்தை நடுவாக வைத்துப் பெரியகோயிலை எழுப்பினர்: கோயிலைச் சூழ, அங்காடி முதலாம் பெரிய தெருவுகளும் பேருந்தேருவுகளை ஒன்று சேர்க்கும் சிறிய தெருவுகளும் அமைத்தனர்; நகரின் இடையிடையே மன்றங்களும் பொதியல்களும் எழுந்தன; பொய்கைகளும், பூஞ்சோலை களும் பலப்பல இடம் பெற்றன. அரசனுக்குரிய அரண்மனை: நகரின் வடகிழக்கே அமைக்கப்பட்டது. இவை அனைத்திை யும் சூழ உயர்ந்த மதிலும், ஆழ்த்த அகழியும், அடர்த்தி காவற்க்ாடும் எடுத்து நகருக்கு அரண் அமைத்தனர். மதுரை மாநகர் அமைப்புக்குறித்து, அம்மதுரையில் இறைவன் செய்த திருவிளையாடல்களை எடுத்துக்கூறும் திருவிளையாடற் புராணம் கூறுவது இது. - - 'மதுரை நோக்கி வரும் மக்கள், மதுரை நெருங்கி விட்டது என்பதை, அம்மாநகரில் எழுப்பும் பல்வேறு ஒலி களும் ஒன்று கலந்து பொருள் விளங்காப் பேரொலியாய் வந்து ஒலிக்கக் கேட்டு உணர்ந்து கொள்வர். அத்தகைய ஒலி அலைகள் ஓயாது எழும் வண்ணம் மக்கள் கூட்டம் மண்டி வாழ்வது மதுரை மாநகரம். இறைவன் திருக்கோயில்களிலும் அரசன் அர்ண்மனையிலும் எழும் முரசொலியும், செந்தழில் ஒம்பும் அந்தணர்களின் நான்மறை ஒலியும், அருள் நெறி நிற்கும் முனிவர்களின் மந்திர ஒலியும், வேந்தனும் வீரர் களும் பெற்ற வெற்றிகுறித்து மக்கள் எடுக்கும் விழா வொலி யும், அரசன் நாற்படை வரிசையில் நிற்கும் வேழங்களின் பிளிற்றொலியும், குதிரைகளின் கனைப்போலியும், போர்க் களமும், ஏர்க்களமும் பாடும் பொருநர்களின் பாட்டொலி யும் ஆகிய பல்வேறு ஒலிகளும், மதுரைநோக்கி வருவாரை, அவர்கள் சேய்மைக்கண் வரும்போதே, வருக வருக என வரவேற்கும்,'