பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. . காலந்தோறும் தமிழகம் தந்தையின் சகோதரர்களின் மக்கள் தாயின் சகோதரர்களின் மக்கள்

தந்தையின் சகோதரிகளின் மக்கள் T. 泛 தாயின் சகோதரிகளின் மக்கள் சகோதரர் மனைவியின் சகோதரர் . 10. சகோதரிகளின் கணவன் 11. சகோதரிகளின் மக்கள் 12. சகோதரர்களின் மக்கள் 13. மகன்கள் 14. மகள்களை மணந்தவர் ஆகிய இவர்களும் உறுப்பினராவதற்குத் தகுதி அற்றவ ராவர். - ஒவ்வொரு குடும்பிலும் உள்ளவர்களில், மேலே கூறிய தகுதிகளை உடையவர்களின் பெயர்ப் பட்டியல் முதலில் தயாரிக்கப்படும். பின்னர், அப்பட்டியலில் உள்ளவர் களில் மேலே கூறிய தகுதியின்மைகளை உடையவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இவ்வாறு, மேற்கூறிய தகுதி களைப் பெற்றிருப்பதோடு, மேற்கூறிய குறைபாடுகள் இல்லாதவர்களின் பெயர்ப் பட்டியல் இறுதியாக்கப்படும். பின்னர், அப்பட்டியலில் இடம் பெறும் பெயர்கள் ஒரே அளவாக வெட்டி வைத்திருக்கும் பனை ஓலையில் தனித்தனியாக எழுதி, அவ்வாறு எழுதப்பட்ட ஒலைகளை ஊர்ப் பெரியவர்களெல்லாம் குறைவறக் கூடியிருக்கும் ஊர்ச்சபையின் நடுவில் வைக்கப் பட்டிருக்கும் புதிய குடத்தில். ஒவ்வொன்றாக இடுவர். அவ்வாறு எல்லா