பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 153 ஒலைகளும் இடப்பட்ட பின்னர், சபையில் உள்ளாருள் மூத்த பெரியவர், ஒலைகள் இட்ட குடத்தைக் கூடி யிருக்கும் ஊர் மக்கள் எல்லாம் நன்கு காணுமாறு தூக்கிப் பிடித்திருக்க, ஏதும் அறியாச் சிறுவன் ஒருவனை அழைத்து, அக்குடத்தில் உள்ள ஒலைகளையெல்லாம் ஒன்று விடாமல் வேறு ஒரு குடத்தில் இடச் செய்து, பிறகு, அக் குடத்துள் ஒலைகளை நன்கு கலைக்கச் செய்து, ஒரு ஒலையை எடுத்துத் தருமாறு பணிக்க, அச்சிறுவனும் அவ்வாறே செய்ய, அவன் எடுத்துத் தரும் ஒலையை நடுநிலையாளர் ஒருவர், தன் ஐந்து விரல்களையும் விரித்தவாறே உள்ளங் கையில் ஏற்று, அவ்வோலையில் எழுதப்பட்டிருக்கும் பெயரைப் படித்துக் காட்டிய பின்னர், அவ்வோலையை அவ்வவையில் கூடியிருக்கும் முதியோர் ஒவ்வொருவரும் படித்த பின்னர், அவ்வேலையில் காணப்படும் பெயருடை யான் அக்குடும்பின் உறுப்பினனாக அறிவிக்கப்படுவன். இவ்வாறே முப்பது குடும்பிற்கும் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவாரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆயினும், இடையில் உறுப்பினர் யாரேனும் குற்றம் புரிந்து விடுவாராயின் அவர் உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்படுவர். --- பகை உணர்வுக்கு வழி வகுக்காத- அதே நிலையில், மக்களாட்சி முறைக்கு மதிப்பளிக்கும். பயன்மிகு நல்ல தேர்வு முறையைத் தமிழ்நாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடைப் பிடித்து வந்துள்ளது. கா தமி-10