பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்திரமேரூர்க் கல்வெட்டு-2 1. ஸ்வஸ்தி பூர் மதுரை கொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு. காலியூர்க் கோட்டத்து தன் கூற்று உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமாள் பூரீ வீரநாராயணன் பூரீ பராந்தகதேவன் பூரீ பரகேசரிவன்மருடைய ரீ முகம் வரக்காட்ட, ரீ முகப்படி ஆ. 2. க்ஞையினால் சோழநாட்டு புறங்கரம்பை நாட்டு பூர் வங்கநகர்க்கரஞ்சை கொண்டயக்ரமவித்த பட்டனாகிய சோமாசிப்பெருமான் இருந்து வாரியமாக ஆட்டொருக் காலும் சம்வத்ஸ்ரவாரியமும் தோட்டவாரியமும், ஏரி வாரியமும் இடுவார்க்கு வியவஸ்தை செய்த பரிசாவது, குடும்புமுப்பதா முப்பது குடும்பிலும் அவ்வங்குடும்பிலா, 3. ரே கூடி கானிலத்துக்கு மேல் இறைநிலமுடையான் தன்மனையிலே அகம் எடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்படாதார் மந்திரப்பிரமாணம் வல்லான் ஒதுவித்து அறிவானை குடவோலை இடுவிதாகவும் அரைக்கானிலமே யுடையான் ஆயினும் ஒருவேதம் வல்லான் ஆய்நாலு: பாஷ்யத்திலும் ஒருபா, : - 4. ஷ்யம் வக்கணித்து அறிவான் அவனையும் குடவோலை எழுதிப்புக இடுவதாகவும் அவர்களிலும் காரியத்தில் நிபுணராய், ஆசாரம் உடையாரானாரையே கொள்விதாகவும் அர்த்த சொலமும் ஆன்ம செளலமும் உடையாராய் முவர்ட்டின் இப்புறம் வாரியஞ்செய்திலா தாராய் கொள்வதாகவும் எப்பேர்பட்ட வாரியஞ் செய்து