பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 159 வாரியமும் கரை காட்டிக்கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறந்த வாரியப் பெருமக்களும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்பச்செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங். 13. கண்டபோது அவனையொழித்து விடுவதாகவும் இவர்கள் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன் மகிருத்தியம் கடைக்காணும் வாரியரே மத்தியஸ் தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப் பாராகவும் இவ்வியவஸ்தை ஒலைப்படியே..க்குக்குட வோலை பறித்துக் கொண்டே வாரியமும் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியது. 14. க்கு முப்பது குடும்பிலும் குடவேர்லைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலைக்கட்டும் புக இட்டு முப்பது குட வோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டுபேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டிலும் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்சவாராவாரியமும் ஆவராகவும் பிற்றையாண்டும் இவ்வாரியங்கள் குடவோலை பறிக்கும் போது இவ்வாரியங்களுக்கு முன்னம் செ. 15. ய்த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூட லேகை செய்தானையும் குட்வோலை எழுதிப்புக இடப் பெறாதாகவும் மத்தியஸ்தரும் அர்த்தசெளலமும் உடை யானே கணக்கு எழுதுவானகவும் கணக்கு எழுதினான் கணக்கு பெருங்குறி பெருமக்களோடு கூட கணக்குக்காட்டி சுத்தன் ஆகிடின் பின்னன்றி மற்றுக்கன. - 16. க்குப்புகப் பெறாதானாகவும் தான் எழுதின கணக்குத்தானே காட்டுவானாகவும் மற்று கணக்கர்புக்கு ஒடுக்கப் பெறாதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல்