பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - - 15 மக்கள் மதுரையை நெருங்க நெருங்க, மதுரை மாநகரின் பல்வேறு மணங்களையும் நுகரத் தொடங்கி விடுவர். மதுரை மாநகரத்து மகளிரும் மைந்தரும் மகிழ்ந்து பூசிக்கொள்ளும் அகில், குங்குமம், கத்துாரி, சந்தனம், முதலாம் மணப்பொருள் களின் மனத்தையும், மைந்தர் மார்பிலும், மகளிர் சுந்தவிலும் அ ரிைத்து கொள்ளும் சண்பகம், மல்லிகை முல்லை, மாதவி முதலாம் மலர் மாலைகளின் மணத்தையும், அறுசுவை உணவாக்கும் அட்டிற்சாலையிலும் அப்பம் கடும் அங்காடி வீதியிலும் எழும் பல்வேறு மணத்தையும், மாடங் களில் எழுப்பும் அகில் முதலாம் மனப் புகைகளின் மணத்தை யும், அரசனும் அரசியாரும் அகமகிழ்ந்து பூசிக்கொள்ளும், அருள் தேறி மேற்கோண்ட அறவோர்களையும் அடிமை யாக்கல்ைல, அழகிய மணத்தையும் வாரிக்கொண்டு வந்து வீசும் மதுரைக் காற்று, 'மாக்காள்! நீங்கள் கருதிச்செல்லும் மாநகர் சேய்மைக்கன் இல்லை; தனிமிக அணித்தாயிற்று' என அறிவித்து, அவர்களை வரவேற்கும்.' சூழம்ை, கோங்கு, வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை: மஞ்சடி, மருது, செலுத்தில், செருந்தி, சண்பகம், பாதிரி குருக்கத்தி, சேம்முல்லை, முசுட்டை, மோசி, மல்லிகை, வென் நறுந்தாள். வெட்பாலை, பிடவம், இருவாட்சி எனும் பன்னிறமலர்கள், நன்னிற ஆடையென மேலே படர்ந்து, தண்ணிரை மறைத்துத் தவழ்ந்து செல்ல, கோங்கு, வேங்கை, முதலாம் மரங்கள் வளர்ந்த மணல் மேடுகள் இடையிடையே இடம்பெற, இது கரையிலும் நிற்கும் முருக்க மரமும், முல்லைக்கோடியும் செம்மலரும் வெண்மலரும் சொரிய , கயல் மீ கண்னெனத் தோன்றி ஆடித்திரிய அறன்பட்ட கருமணல், கூத்தலெனக் காட்சி நல்க ஒடிவரும், பொய்யா வளம் வழங்கும் வையையாறு, மதுரையின் வடகிழக்குப் பகுதிகளை வளைத்து ஓடி, அம்மாநகரின் ஒரு பால் அரணாய் விளங்கிற்று."

§ {