பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ. பாண்டியர் பேரரசின் வீழ்ச்சி கடைச் சங்க காலத்தே பேரரசு நடாத்திய பாண்டியர், பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரை மாநகரை மகம்மதியர் கைப்பற்றிக் கொண்ட காலம் வரையும், சரிவற்ற பேரரசாகவே வாழ்ந்தனர் எனக் கொள்வதற்கு இல்லை. அவர்கள் அடியோடு மறைந்தது கி.பி. பதினான்காம் நூற்றாண்டில்தான் என்றாலும், இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகால வாழ்விலும் சரிவையும் உயர்வையும் பலமுறை சந்தித்தே வந்துள்ளனர். பாண்டி நாட்டின் தென் எல்லையாக விளங்கிய பஃறுளி ஆற்றையும், குமரிமலையையும் கடல்கொண்டுவிட்டதனால், பாண்டி நாட்டிற்கு நேர்ந்த நிலக் குறைபாட்டினை நீக்குவான் வேண்டி, சேரநாட்டுக் குண்டுர்க் கூற்றத்தையும், சோழநாட்டு முத்துார்க் கூற்றத்தையும் கைக்கொண்டு நிறைவு செய்ததால், நிலந்தருதிருவின் நெடியோன் என அழைக்கப்பட்ட, பாண்டியன் மாகீர்த்தியும், தான் இளையன் என்பதால் தன்னை அழித்துவிட்டுப் பாண்டி நாட்டைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்ற நினை வோடு வந்து, மதுரையை வளைத்துக்கொண்ட சேர, சோழர், வேளிர் ஐவர் உள்ளிட்ட எழுவர் கூட்டணியை முறியடித்து, அவர்களை சோணாட்டுத் தலையாலங்கானம் வரைத் துரத்திச்சென்று அழித்து, அவர்களுக்கு உரிமையான நாடுகளையும் கைக்கொண்டு தமிழகம் முழுமையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்ட, தலையாலங்கானத்துச்