பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 காலந்தோறும் தமிழகம் செருவென்ற நெடுஞ்செழியனும் சிறப்பளிக்க, கடைச் சங்க காலத்தில் சிறத்து விளங்கிய பாண்டியப் பேரரசு, கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்துள் நுழைந்த வடபுலத்துக் கொள்ளைக் கூட்டத்தவராய களப் பிரர்களால் இருந்த இடம் தெரியா வண்ணம், ஒருமுறை அழிக்கப்பட்டது. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் வரை ஏதும் அறிந்து கொள்ளா வண்ணம் மறைந்து கிடந்த அப்பேரரசு, கி. பி. 590ல் கடுங்கோன் என்பவன், களப்பிரர்களை அழித்து மீண்டும் நிறுவ, புத்துயிர் பெற்றுப் பொலிவுற்றது. அந்நாள் தொட்டு கி.பி. 880ல் நடைபெற்ற திருப்புறம் பியம் போர் வரை, பாண்டிய நாடே அல்லாமல், சோழநாடு, தொண்டை நாடுகள் உள்ளிட்ட தமிழகம் முழுமையும் தம் ஓர் அரசே நிலவ ஆண்ட பாண்டியப் பேரரசு, அப்போரில், இராசசிம்ம பாண்டியன் பெற்ற தோல்வியால் சோணாட் டிற்கு அடங்கிய சிற்றரசாக. இரண்டாம் முறையாக சீர்குலைந்து போயிற்று. பாண்டியப் பேரரசின் அழிவிற்கு வித்திட்டவர் சோழரோ, சிங்களவரோ அல்லர். மாறாக, அப்பாண்டியர் குடிவந்தவரே ஆவர். பாண்டியர் குடிவந்தவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையே அவர்கள் அழிவிற்குக் காரண மாம். சோழர்கள், பாண்டி நாட்டை வென்று அகப்படுத்திக் கொண்டு, தமக்குரியதான மதுரை அரண்மனையில் அமர்ந்துகொண்டு, "மதுராந்தகன்', 'மதுரை கொண் டான்' என்பன போலும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டு, முடிசூட்டு விழாக் கொண்டாடிய அந்நிலையிலும், அப் புறப்பகையை அழிக்க வேண்டியாவது பாண்டியர் ஒன்றுபட்டு நின்றாரல்லர். மாறாக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அந்நிலையிலும், தமக்குள்ளே பகைகொண்டே. நின்றனர். . .