பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 163 பராக்கிரம பாண்டியனும் அவன் மகன் வீரபாண்டிய னும் ஒருபுறமும், குலசேகர பாண்டியனும் அவன் மகன் விக்கிரம பாண்டியனும் மறுபுறமும் நின்று, அரசுரிமை காரணமாகப் பகைகொண்டு, ஒருவரையொருவர் அழிப்பான் மூனைந்து, அதற்குத் துணைபுரியுமாறு சோழர்களையும். சிங்களவர்களையும் மாறி மாறி அணுகித் தாமும் அழிந்து, பாண்டிப் பேரரசின் அழிவிற்கும் வழிகோவிய நிகழ்ச்சியை வரலாறு மறைக்கவில்லை. - சோழர், பேரரசின் அழிவிற்குப் பின்னர், பாண்டியர் பேரரசைக் காஞ்சி முதல் குமரிவரை பரவிய பெருமைக்குரிய தாக உயர்த்தினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்றாலும், அவனாலும் பாண்டியர்களிடையேஒற்றுமையை உருவாக்க முடியவில்லை. அவனை அடுத்து ஆட்சிக்கு வந்த மாறவர்மன் குலசேகரன் காலத்திலேயே, பாண்டி நாட்டை அப் பாண்டியர் குடிவந்த ஐவர், ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கொண்டு தனியரசு நடாத்தத் தலைப்பட்டு விட்டனர். இவ்வலை நிலையை, அக்காலத் தமிழகம்போந்த, மேனாட்டு வழிப்போக்களாகிய மார்க்கோபோலோவும், மகம்மதிய வரலாற்று ஆசிரியனாகிய வாசப்பும் எடுத்துக்கூறி எள்ளி நகையாடியுள்ளனர். ஆளும்குடி வந்தவரிடையே ஒற்றுமையின்மை நிலவக் கண்ட அந்நிலையை, அப்பேரரசுக்கு அடங்கித் திறை செலுத்துவோராக ஆங்காங்கே சிறு சிறு நிலப்பிரிவுகளை ஆண்டுவந்த குறுநிலத் தலைவர்கள், அப்பேரரசின் ஆணையை ஏற்கமறுத்துத் தனி ஆட்சி நடத்துமளவு துணிவு பெறும் நிலையும் தலைவிரித்தாடத் தொடங்கி விட்ட்து. பாண்டியர்க்கு அடங்கிய குறுநிலத் தலைவர்களாகிய வாணாதிரா யர்களும், சம்புவரையர்களும் முை றயே,பாண்டி மண்டலத்தின் தென் பகுதியிலும், வட பகுதியிலும் தனி ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். -