பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காலந்தோறும் தமிழகம் இவ்வாறு, வாழ்வு தாழ்வுகளை மாறி மாறிப் பெற்று வந்த பாண்டியர் பேரரசு, மீண்டும் வாழ்வறியாத் தாழ்வு நிலை நோக்கிய விரைவு நடையினை, மாறவர்மன் குலசேகரன் காலத்தில் மேற்கொண்டு விட்டது. மாறவர்மன் குலசேகரனுக்கு ஆண்மக்கள் இருவர். ஒருவன், முறையாக மணந்துகொண்ட பட்டத்தரசிக்குப் பிறந்த சுந்தரபாண்டியவன்; மூத்தவன். மற்றொருவன், குலசேகரனின் காதற் பரத்தைக்குப் பிறந்த வீரபாண்டி:ன்: ஆண்டில் இளையவன் குலசேகரனுக்குப் பிறகு அரச உரிமை பெறத் தக்கவன் சுந்தரபாண்டியனே எனினும், அறிவு, ஆண்மை, ஆற்றல்களில் வீரபாண்டியனே சிறந்து விளங்கக் கண்ட குலசேகரன் அவனையே இளவரசனாக்கி RTFTಿಕr அதனால் சினங்கொண்ட சுந்தரபாண்டியன், தந்தைக்கு எதிராகக் கொதித்தெழுந்து, தம்பியைத் துரத்திவிட்டுத் தந்தையைக் கொலை செய்துவிட்டுத் தானே அரசனாக முடிசூட்டிக் கொண்டான். படையும், பண்டாரமும் அவன் :உடைமையாயின. இது நிகழ்ந்தது கி.பி. 1310ல், தந்தையைக் கொலை செய்த தமையனைப் பழிவாங்கத் துணிந்தான் வீரபாண்டியன். படை, திரட்டிக் கொண்டு புறப்பட்டான். இருவர்க்கும் நடைபெற்ற போரில், இரு திறத்தவர் படையும் பாழுற்றன; ஆயினும் இறுதியில் பெரும் புண்பெற்ற வீரபாண்டியன், சுந்தரபாண்டியனால் சிறைபிடிக்கப்பட்டான். அவனுக்குரிய படையும் பெரும் பொருளும் சுந்தரபாண்டியன் உடைமையாயின. அந்நிலை யில், வீரபாண்டியன் உடன்பிறந்தவன் மகன் ஒருவன், வீரபாண்டியனுக்குத் துணைவந்தான். அவனால் சிறை யினின்றும் விடுவிக்கப்பட்ட வீரபாண்டியன், பெரும்படை யோடு சென்று சுந்தரபாண்டியனைத் துரத்தினான். அவன் தாக்குதலைத் தாங்கமாட்டாத சுந்தரபாண்டியன், டெல்லி