பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 165 - சுல்தான் அலாவுதினால் அனுப்பப்பட்டு, ஹொய்சள நாட்டை வென்று, அதன் தலைநகரில் வீற்றிருந்த மாலிக் காபூர் பால் அடைக்கலம் புகுந்தான். அஃது அறிந்த வீரபாண்டியன் மாலிக்காபூர்க்கு எதிராக ஹொய்சள அரசனுக்குப் படைத்துணை அனுப்பினான் ம்ாலிக்காபூர் மதுரை மீது போர்தொடுத்துப் புறப்பட் டான். வெறிகொண்டு விரைந்து வரும் முகம்மதியப் படையைத் தடுத்து நிறுத்துவார் யாரும் இல்லை: மதுரை புகுந்த மாலிக்காபூர், வீரபாண்டியனைத் தலைநகரிலிருந்து துரத்திவிட்டானே ஒழிய, தன்னிடம் அடைக்கலம் புகுந்த சுந்தரபாண்டியனுக்கு, மதுரை மன்னனாக முடிசூட்டினான் அல்லன்: - - மாறாக, அவனையும் துரத்திவிட்டு, இருவர்க்கும் உரிய உடைமைகள் அனைத்தையும் கொள்ளையடித்தான். - கோயில்களை இடித்தான்; மக்கள் எண்ணியும் பார்க்காத இன்னல்களை விளைவித்தான். பெரும் பொருட்குவியல் களோடு, மதுரையைவிட்டு வெளியேறினான். மதுரை மீது படையெடுத்த மாலிக்காபூர் பாண்டி நாட்டில் மகம்மதியர் ஆட்சியை நிறுவவில்லை எனினும், பாண்டியர் அழிவுக்கு அதுவே முதற்படியாய் அமைந்தது: மாலிக்காபூர் மதுரை யைக் கொள்ளையடித்துத் திரும்பிய பத்தாண்டுகளுக்குள், டெல்லி சுல்தான் குஸ்ருகான் மற்றொரு படையெடுப்பைத் தென்னாட்டின் மீதும் துவக்கின்ான்; மதுரை இரண்டாம் முறையும், மகம்மதியர்களின், கொலை, கொள்ளைகள் போலும் கொடுமைகளுக்கு உள்ளாயிற்று. மதுரையும், அதைச் சூழ உள்ள பாண்டி நாடும் இவ்வாறு மகம்மதியர் தாக்குதலுக்கு உள்ளாகித் தளர்ந் திருக்கும் நிலையில், கேரள நாட்டு அரசனாகிய ரவிவர்மன் குலசேகரனும், காகத்திய குப்பிடி நாயகனும், பாண்டியர்க்கு உடைமையாக விளங்கிய தொண்டை மண்டலம், சோழ