பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காலந்தோறும் தமிழகம் மண்டலம் ஆகிய நாடுகளை மாறிமாறி வென்று, ஆங்கு ஆட்சி புரித்து கொண்டிருந்த பாண்டியர். குலத்தவரைத் துரத்திவிட்டனர். இவ்வாறு மகம்மதியர்களும், கேரளர்களும், காகத்தி பரும் அடுத்தடுத்துப் படைதொடுத்துப் பாண்டியர் அரசைச் சிறுகச் சிறுக அழித்துவிடவே, பாண்டியர்கள், தம் தாயக மாம் மதுரையை விடுத்து, தமிழகத்தின் தென்கோடிப் பகுதி யாகிய நெல்லை மாவட்டத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டு உயிர்வாழத் தலைப்பட்டனர். நெல்லையின் பல்வேறு பகுதிகளின், சிறுசிறு குடியிருப்பு களுக்கு உரியவராகி, ஆங்காங்குள்ள கோயில்களுக்குத் தங்களால் இயன்ற அறப்பணி ஆற்றி வந்த அவர்கள் வாழ்க்கையும், மதுரை, நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட காலம்வரையே, ஒரு சிறிது அறியக் கிடந்தது. அதன் பிறகு, அவர்களைப் பற்றிய குறிப்பே எதுவும் கிடைத்திலது. தமிழகத்துக்கு ஊறு செய்வான் வேண்டித் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களாம் வடவர் படையை வென்று ஒட்டி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க பெரும் பெயர் பூண்ட அப் பாண்டியன் வழிவந்த ஒருவனே, வடவராகிய மகம்மதியர் படைக்கு வரவேற்பு அளித்துத் தமிழகத்தின் அழிவிற்குத் துணை நின்றான்: வரலாறு விளைவிக்கும் விந்தைதான் என்னே?