பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நாயக்கர் ஆட்சி மத்திய அரசு அரசனும் அமைச்சர்களும் தளவாய் அமைச்சர்கள் துணை செய்ய அரசனே நாடாண்டு வந்தான் நாயக்கர் ஆட்சியில், தளவாய் என்பவனே நிர்வாகத் தலைவனாவான். உள் நாட்டுச் சட்டம், அமைதி, வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகிய இரு பொறுப் புக்களும் அவன்பாலே இருந்தன. அமைச்சன் பொறுப்பும், படைத்தலைவன் பொறுப்புக்களும், தளவாய் பால் ஒரு சேர ஒப்படைக்கப்பட்டன. பெரிய பெரிய அரசியல் புரட்சிகளெல்லாம் தோன்றி அடங்கிய பின்னர், கொதிப் புள்ளம் கொண்ட குறுநிலத் தலைவர்களையும், பொது மக்களையும் அடக்கி, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த, பலம் வாய்ந்த நிர்வாகத் தலைவர் தேவைப் பட்டனர். அதனால், உள் நாட்டில் சட்டம் அமைதியையும், வெளிநாட்டில் நாட்டுப் பாதுகாவலையும் ஒரு சேர நிர்வகிக்க வல்ல அலுவலாளர்கள் தேவைப்பட்டனர். அரசன் இருந்தாலும், தளவாயே நாட்டின் தலைவனாக விளங்கினான். அரசன் ஆற்றல் இழந்தவனாயின், தளவாயே அனைத்தும்; ஆனால், பலம் வாய்ந்த அரசர்கள், சில கா தமி-11 -