170 காலந்தோறும். தமிழகம் சமய்ம் தளவாயின் அதிகாரவரம்பைக் குறைத்து விடுவதும் உண்டு. பிரதானி தளவாய்க்கு அடுத்த பெரிய அரசியல் அலுவலாளர் பிரதானி எனப்படும் நிதி அமைச்சர் ஆவர். வருவாயைப் - பெருக்குவதும், செலவினங்களை ஒழுங்கு படுத்துவதுமே அவன் தலையாய பொறுப்பாகும். என்றாலும், பொது வாக உள்நாட்டு விவகாரங்களில் அவன் செல்வாக்கு பெரி தாகவே இருந்தது. ஏனைய அமைச்சரினும், அவன் சற்று உயர்ந்தே விளங்கினான். நாயக்கர் ஆட்சியில் முதல் தளவாயாக விளங்கிய அரியநாதர், பிரதானி பொறுப் பையும் தானே ஏற்றிருந்தார். இராயசம் - அடுத்த பெரிய அதிகாரி, இராயசம் என அழைக்கப் பட்ட செயலாளன் ஆகும். நிர்வாகத்தில் அவனே தலைமை வகித்தான் நிர்வாக அமைப்புகளுக்கும், அரசர் களுக்கும் இடையே தொடர்பு படுத்தும் பொறுப்பேற் றிருந்த அவன், தளவாய், பிரதானிகளைப் போல் தனித் தன்மை வாய்ந்தவன் அல்லனாயினும், நிர்வாகத் துறையில், அவனே தலைவனான். அரசியல் கொள்கை வகுப்பது, இம்மூவர் கொண்ட குழுவே ஆகும். . வருவாய் செலவினங்களைப் பதிவு செய்யும் பதிவு ஏடுகளின் பொறுப்பேற்றிருக்கும் கணக்கன் என்பவனும், அயல் நாட்டு உறவுகளை வகுக்கும் ஸ்தானாபதி என்பவனும் அடுத்த பெரிய அதிகாரிகள் ஆவர். - ஆட்சி நாயக்கர் ஆட்சியில், அமைச்சர்களும் அமைச்சர வையும் இடம் பெற்றிருந்தன என்றாலும், நாயக்கர் ஆட்சி
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
