பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 171 ஒரு வகையில் தனிமனித ஆட்சியே ஆகும். அரசியல் கொள்கைகள் வகுக்கும் அதிகாரம் அரசன் இடமேஇருந்தது. ஒர் அமைச்சர் பால் ஒப்படைத்திருக்கும் துறை பொறுப் பினை, அவ்வமைச்சர் இடமிருந்து எடுத்துத் தானே வைத்துக் கொள்ளும் முழு உரிமை அரசன் பெற்றிருந்தான் திருமலை நாயக்கரும், விஜயரங்க சொக்கநாதனும், தேவஸ்தானப் பொறுப்பைத் தாமே வைத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கதாம். - . அமைச்சர்களையோ பிற அரசியல் அதிகாரிகளையோ கலக்காமல், அரசர்கள் தாமாகவே எடுக்கும் நடவடிக்கை களை அவை, மக்கள் நலம் கருதியவாயின், மக்கள் மறுக் காமல் ஏற்றுக் கொண்டுள்ளனர். வழி வழி வந்த மரபுகள், மக்கள் கருத்து, அமைச்சர்கள் அறிவுரை ஆகிய இவை;. அரசர்களின் அதிகார வரம்பை ஓரளவு கட்டுப்படுத்தியே உள்ளன. செல்வாக்கு மிக்க திருமலையும், பொதுமக்கள் கருத்திற்குத் தலை வணங்கியுள்ளான். நிர்வாக யந்திரம், நல்லாட்சிக்கு அடிகோலும் ஒரு வழித் துணையே ஆதலின், நாயக்கர் ஆட்சி. நிர்வாக யந்திர அமைப்பிற்குச் சிறப்பிடம் அளிக்காது, நல்லாட்சிக்குச் சிறப்பிடம் அளிப்பதாகவே இருந்தது. - பாளையம் நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட நாடு. ஆட்சி நலம் கருதிப் பல்வேறு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. பாண்டி மண்ணில், நாயக்கர் ஆட்சி கண்ட விசுவநாத நாயக்கனும், அரிய நாத தளவாயும், அரசியல், பொருளா தாரம், பாதுகாப்பு ஆகியவை கருதி, நாட்டைப் பல்வேறு பாளையங்களாகப் பிரித்தனர். பாண்டியர் பேரரசு சரிந்த நிலையில், உழவுத் தொழில் சீரழிந்து கிடந்தது.