பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காலந்தோறும் தமிழகம் வையையாறு, மக்கள் வழங்கலாகா ஆழம் உடையது, அதனால் மதுரை மாநகர்க்கு வடநாட்டினின்றும் வருவார் வையையை இடையூன்றிக் க.ந்து வருவதற்கு ஏற்ற எண்ணற்ற ஒடங்கள் நிற்கும் துறைகள் பல இரு கரையிலும் அமைந்திருந்தன. குதிரை முகம் போலவும், யானை முகம் போலவும், சிங்க முகம் போலவும் அமைக்கப்பட்ட அவ்வோடங்கள் ஆற்றைக் கடந்து செல்லும் காட்சி காண்டார் கண்களுக்குக்களிப்பூட்டும் கவின் மிகு காட்சியாம். வையையாற்றைக் கடந்து வந்தால், நகரின் நாற்புறமும் வளர்ந்திருக்கும் காவற்காடு, பகைவர் படை எளிதில் புகாவாறு தடுத்து நகரைப் பாதுகாத்து நிற்கும். காவற்காடு களைக் கடந்து சென்றால் வருவது, மதுரை மாநகரின் புறநகர்; தாமரைப் பொய்கையும், தண்ணறுக் சோலை களும், நெல்லும் கரும்பும் விளையும் நன்செய்களும் நிறைந்த அப்புறநகர், இயற்கையோடு இரண்டறக் கலந்துறையும் இன்ப வாழ்வினரான அறவோர்களின் வாழிடமாம்: ஆங்கு அவ்வறவோரல்லது, பிறர் எவரும் சென்று வாழ்தல் இயலாது. அறவோர்கள் வாழும் அறப்பள்ளிகளும், அவர் வணங்கும் திருமால் கோயிலும், இயக்கிபோலாம் சிறுதெய்வ கோட்டங்களும் மிக்கது அப்புறநகர்; கடவுள் வழிபாட்டு ணர்வு மிக்க மதுரை மக்கள், காலையிலும், மாலையிலும், மதினைக் கடந்து புறநகர் போந்து, ஆங்குக் கோயில் கொண் டிருக்கும் கடவுளரை வழிபட்டுச் செல்வர்.” புறநகரையும் அகநகரையும் இடை நின்று பிரிப்பன, அகழியும் மதிலும். காவற்காட்டை அழித்து மேல் வரும் பகைவர் படை, மதிலைத் தாக்கிப் பாழாக்க:வாறு அடுத்து நிறுத்துவது அகழி. வையையாற்று நீராலும், நகரின் மாடங் களிலிருந்தும் மனைகளிலிருந்தும் ஓடிவரும் கழிநீராலும் நிறைந்த அவ்வகழி, எளிதில் கடக்கலாகா அகலமும் ஆழமும் உடைத்து, கருநிறக்குவளையும் செந்நிறத் தாமரையும்,