பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காலத்தோறும் தமிழகம் நாடு பெருங்காடாகக் காட்சி அளித்தது. அது மக்க ளின் பாதுகாப்பையும், நலத்தையும் கெடுக்கும் நிலைக்கள மாய் அமைந்தது. கொலையும், கொள்ளையும், குழப்பமும் தலைவிரித்து ஆடின. இந்நிலையில், ஆங்காங்கே உள்ள உள்ளூர்த் தலைவர்களுக்குப் பெருவாரியான அதிகாரமும் உரிமையும் வழங்காமல், மத்திய அரசு மட்டும் எதையும் செய்துவிட முடியாது. பாண்டியர் காலத்தில், மகம்மதியர் தாக்குதல் காரண மாகவோ, அல்லது தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் தேடியோ, வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய, அவ்வுள்ளுர்த் தலைவர்கள், பாண்டியர்களுக்குத் திறை செலுத்தும் குறுநிலத் தலைவர்களாகவும், அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருந்தனர். அத்தகைய தலைவர்கள். பால் நம்பிக்கை வைத்து, பெருமதிப்பு அளித் தால், அப்புதியவர்களின் ஆர்வமும் உழைப்பும், ஆட்சிக்கு எதிராகப் பயன்படாம்ல், உழவு, தொழில் போலும் ஆக்கப் பணிகள்பால் செல்லும். மேலும், தேவைப்படும் காலங் களில், அவர்களின் படைபலத்தையெல்லாம் ஒருமுகப் படுத்தி நாட்டுப் பாதுகாப்புக்குப் பயன் கோடல் கூடும். இவற்றையெல்லாம் எண்ணி அமைக்கப்பட்ட பாலையங் களின் எண்ணிக்கை எழுபத்திரண்டு எனக் கூறுகின்றன. வரலாற்றுக் குறிப்புக்கள். பாளையத் தலைவன் பாளையக்காரன் எனப்பட்டான். உங்க்ள் மண்ணுக்கு நீங்களே உரிமையாளர்கள் தலைவரி கள் என்றுகூறி, கண்ணியம்மிக்க பொறுப்பினை அவர்கள் பால் ஒப்படைக்கவே, அவர்கள், தங்களின் தலைவர்களாம். பாண்டியர்களை வென்றவர்கள் என்பதால், நாயக்க மன்னர்கள் பால்கொண்ட வெறுப்பும் பகைஉணர்ச்சியும் தணிந்தன. பாளையம், அவர்களுக்குத் தந்தை வழி மகன் என்ற வழிவழி உரிமையுடையதாகும் என அறிவிக்கவே,