பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 173 அவர்களுக்கு அப்பாளையங்களை வளப்படுத்துவதில் ஆர்வம் மிக்கது. நீதி, நிர்வாகம், காவல் ஆகிய முத்துறையிலும் அவர்களுக்கு முழுஉரிமை அளிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால், அந்த அந்தப் பாளையத்திற்கு அவர்களே மன்னர்கள். இதற்குப் பதிலாக, பாளையத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை அரசுக்குத் திறையாகத் தரவேண்டும்: மற்றொரு பங்கில், தேவைப்படும் காலங்களில் மத்திய அரசுக்குத் தருவதற்கென ஒரு படையை நிறுவிப் பேணி வருதல் வேண்டும். துறைகள் பல்வேறு துறைகளையும் செயல்படுத்தி தடத்திச் செல்லத், துறைத் தலைவர்கள் இருந்தனர். அவர்களுக்குக் கீழே பல்வேறு நிலைகளில் பணிபுரியப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்: தம்கீழ்ப் பணிபுரிய வல்லாரை நியமிக் கவும், தவறு கண்ட வழி நீக்கவும், துறைத் தலைவர்களுக்கு முழுஅதிகாரம் அளிக்கப்பட்டது: அவர்கள் முறையாக மாத ஊதியம் வழங்கப்பட்டனர்: அவர்கள் ஆற்றும் அரும்பணி சளைப் பாராட்டும் முகத்தான் அரசர்கள் அவ்வப்போது வழங்கும் நில நன்கொடை, நிதி நன்கொடைகளே அவர்கள் ஊதியமாம் என வரலாற்று ஆசிரியர் சிலர் கூறுவது சரியாகாது. நீதி மத்திய அரசு, தன் பொறுப்பில் முறையான நடுவர் மன்றம் எதையும் நிர்வகிக்கவில்லை. ஆங்காங்குள்ள கிராமத் தலைவர்களே, நடுவர்களாக இருந்து நீதி வழங்கி வந்தார்கள்: உடன்பிறந்தவர்களுள் மூத்தவன் யார்: தந்தையை அடுத்துப் பாளையத்துக்கும், பொருளுக்கும் உரியவன் யார், என்பன குறித்து வரும் வழக்குகன் எல்லாம் அக்கிராம மன்றங்களிலேயே தீர்க்கப்பட்டன. சமுதாய,