பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 114 காலந்தோறும் தமிழகம் சமய வழக்குகள் மட்டுமே, அரசர்கள் முன் உரைக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டன. வருவாய்த் துறை நிலவரி போலும் பல்வேறு வரிகளை முறையாகவும், எளிமையாகவும் வசூலிக்கத்தக்க வகையில், வருவாய்த்துறை அமைக்கப்பட்டது. கிராம வருவாய்த்துறை அதிகாரி, மணியக்காரன் அல்லது அம்பலக்காரன் என அழைக்கப் பட்டான். நிலத்தீர்வை, பயிரிடும் செலவுபோக ஒரு நில வருவாயில் பாதி ஆகும். நிலத்தீர்வை நாணயமாகவே வசூலிக்கப்பட்டது. அன்றாடம் வசூலிக்கப்பட்ட வரித் தொகை, கிராமத்திலிருந்து மாகாணத் தலைவருக்கு அன்று அன்றே அனுப்பப்படும். அவர் அதைப் பிரதானியின் பொறுப்பில், தலைமையிடத்தில் உள்ள அரசு பண்டாரத். தில் சேர்த்துவிடுவர். நிலவரியே, அரசின் முக்கிய வருவாயாகும். எல்லள் நிலங்களும் பாளையக்காரர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தலைமையிடத்திற்கு அண்மையில் உள்ளனவும், நிலவளமும், நீர்வளமும் பொருந்தியனவுமாய ஏராளமான நிலங்கள் அரசரிடத்தில்ேயே இருந்தன. தொலைவில் இருந்தனவும்: திருத்தம் பெறாதனவுமாகிய நிலங்களே பாளையக்காரர் கள்பால் ஒப்படைக்கப்பட்டன. & 2. ' நிலவரிக்கு அடுத்து, அரசுக்கு நிதி அளித்தது, பாளை யக்காரர் தரும் கப்பமாகும். இது நிலையான வருவாயா காது. பாளையக்காரர் நல்லவர் அல்லாதவராக மாறிய நிலையிலும், மத்தியில் வலுவற்ற ஒருவன் அரசனாகி விட்ட நிலையிலும், இத்துறையில் குறைவு. ஏற்பட்டு விடும்: அடுத்த பெரிய வருவாய், முத்துக் குளிப்பதாலும், சங்குக் குளிப்பதாலும் கிடைக்கும் வருவாயாகும். இவை தவிர்த்து.