பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 175 உழவு, பண்டார வாடை, ஜோடி என்பன போலும் வரிப் பேயர்கள் கல்வெட்டுக்களில் உள்ளன; தறிகள் மீதும், தறி நெய்வோர் மீதும், வரிகள் விதிக்கப்பட்டதாகவும், தெரிகிறது. அரசுப் பணியாளர்களுக்கு ஊதியம் என்ற வகையில் ஆகும் செலவு மிக மிகக் குறைவு ஆதலானும், படை அமைக்கும் பொறுப்பு பாளையக்காரர். பால் ஒப்படைக்கப் பட்டமையால், அத்துறையில் ஆகும் செலவும் இல்லை ஆதலானும், அத்துறைகளில் ஆகும் நிர்வாகச் செலவினம், அரசியல் பண்டாரத்தைப் பெருமளவில் பாதிப்பதில்லை; ஆகவே, நாயக்கர் காலத்தில், வருவாயினும், செலவினம் குறைந்தே இருந்தது. இவ்வகையால் ஏற்படும் செல்வக் குவியல்கள், பெரிய பெரிய கோயில்களைக் கட்டுவது, அறச்சாலைகளை நிறுவுவது; நீர் வளம் பெருக, பெரிய பெரிய ஏரிகளையும்: வாய்க்கால்களையும் வகுப்பது போலும் துறைகளில் செல விடப்பட்டன போர் நடைபெறும் காலங்களிலும், புயல், வறட்சிகளால் பேரிழப்பு நேரும் காலங்களிலும் உதவுவதற் காகவும், அச் செல்வக்குவியல்கள் பயன்பட்டன. பலம் வாய்ந்த அரசு அமைக்கவும், பல்வேறு அரசியல் குழுக்களும், பாழ் செய்யும் உட்பகையும், மன்னனையும் மக்களையும் கொன்று குவிக்கும் குறும்பர்களும் இல்லாமல் செய்யவும், நாயக்க மன்னர்கள் பல்வேறு வழிமுறை களை மேற்கொண்டார்கள் எனினும், பாளையக்காரர் களின் முரட்டுத் தன்மையினாலும், கொள்ளையடித்துப் பொருள் குவிக்கும் கொடியோர்களாலும், நாட்டில் குழப் பங்கள் மிகவே செய்தன. நாயக்கர் ஆட்சியின் இறுதிக் காலத்திலும், குழப்பங்கள் மிக்க காலங்களிலும் மக்கள் பேரிடர்ப்பாடுகளுக்கு உள்ளாயினர்.