பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 காலத்தோறும் தமிழகம் , இவையே அல்லாமல், கொடிய பஞ்சமும், கொடு நோய்களும் மக்களை வாட்டி வதைத்தன. இவ்வழிவுப் பாதைகளை அகற்ற இரசு தன்னால் ஆனது எல்லாம் செய்தது. என்றாலும். அவை அறவே அகற்றப்பட்டன. அல்ல; மாறாக, சில சமயம் மனித ஆற்றலையும் மிஞ்சிய ஆற்றல் வாய்ந்தனவாகி, அவை அல்லல் விளைவித்தன. காடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, வயல்களாகவும், வாழிடங்களாகவும் மாற்றப்பட்டன என்றாலும், காடுகள் அறவே அழிக்கப்பட்டன அல்ல; கொடு விலங்குகளுக்கும், கொடியவர்களுக்கும் இருப்பிடமாகி இடர் விளைவித்து வந்தன. வாணிகம் மகிகள், தங்கள் தேவைகளைக் குறைத்தே வாழ்ந்தனர் ஆதலின் அவை உள்நாட்டிலேயே கிடைப்பது ஆயின! அதனால், நாயக்கர்கள் வாணிகத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் சிறப்பிடம் அளிக்கவில்லை: தலைநகரைச் சூழ உள்ள பகுதிகளில் அக வாணிகம் ஒரளவு, உள் நாட்டு மக்களால் மேற் கொள்ளப்பட்டன. எனினும் புறவணிகம் வெளிநாட்டு மக்களிடமே இருந்தது. ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள் மீது சுங்கவரி விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. என்றாலும், அது சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது. முத்து வாணிகமும் சங்கு வாணிகமும் மேனாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்டன. மதுரையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெற்ற கைத்தறித் தொழில் தவிர்த்து வேறு தொழில்கள் நடைபெற்றதாகத் தெரிய வில்லை. . . v. சமய நெறி எம்மதமும் சம்மதம் என்பதே நாயக்கர்கள் மேற் கொண்ட சமய நெறியாகும்; தாங்கள் பின் பற்றிய