ат о காவிந்தனார் 177 சமயமே அல்லாது பிற சமயங்களையும் மதித்தே வாழ்ந் தனர். தங்கள் ஆட்சிக் காலத்தில் மகம் மதியர்கள் மேற் கொண்ட கொடுமைகளையும் மறந்து, மன்னித்து, அவர் களின் தொழுகை இடங்களாம் மசூதிகளுக்கும், தனிப்பட்ட மகம்மதியர்களுக்கும், அரிய பெரிய தானங்களை அளித் துள்ளனர். மக்களின் சமய நல்வாழ்வுக் கொள்கைகளைப் பேணிக் காப்பதே அரசின் தலையாய கடமை என நாயக் கர்கள் உணர்ந்திருந்தமையால், அவர்கள் ஆட்சிக் காலத்தில் சமயங்கள் செழித்தோங்கி வளர்ந்து நின்றன. சமுதாய அமைப்பு நால்வருன அமைப்பு, நாயக்கர்களால் அழிக்கப்பட வில்லை . பிராமணர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப் பட்டனர். அவர்களுடைய அறிவுரைகள், அரசர்களால் கேட்கப்பட்டு, மதிக்கப்பட்டன. சாதிமுறை அமைப்பில் மாற்றங்கள் நிகழ்வதை நாயக்கர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. ஐந்து பிரிவினராகப் பிரிந்து இருந்த கம்மாளர்கள் தம்மிடையே, கொள்வன கொடுப்பனமூலம் கலந்துவிடக் கூடாது மதுரைப் பட்டு நூல்காரர், உபநயன முறையில், பார்ப்பனர் நெறியைப் பின்பற்றுதல் வேண்டும் என்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் கூறு கின்றன. பலதார மணமும், உடன்கட்டை ஏறுதலும் அரசர்களி டையே வழக்கமாக இருந்தன. திருமலை நாயக்கர் 200 மனைவியர்களையும், கிழவன் சேதுபதி 47 மனைவியர்களை யும் மணந்திருந்ததாகவும், அவ்விருவரும் இறந்தபோதி: அவர்களின் மனைவியர் அத்தனை பேரும் உடன்கட்டை, ஏறி உயிர் நீத்ததாகவும், அக்கால வரலாற்று நூலாசிரியர் களின் குறிப்புக்களில் இருந்து தெரிகிறது.
பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
