பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 காலந்தோறும் தமிழகம் கல்வி கல்வித் துறையில், நாயக்கர்கள், இந்துமதம் பின்பற்றிய சமயக் கல்வியோடு இணைந்த கல்வி முறையையே பின் பற்றினர். பிராமணர்கள் மட்டுமே கற்க வாய்ப்பு அளித் தனர். மதுரையில் மட்டும் பத்தாயிரம் மாணவர்கள் கல்வி கற்று வந்தனர் என்றும், அவர்கள் அனைவரும் பிராமணச் சிறுவர்களே என்றும், கல்வி தவிர்த்து வேறு பொருள்கள்மீது அவர்கள் சிந்தனை சிதறிவிடக்கூடாது என்பதால், அம் மாணவர்களுக்கு உணவு, உடை, உறையுள் அளிக்கவும், அவர்களின் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும், பெரிய பெரிய அறநிலையங்களை அரசர்கள் நிறுவி வைத்தார்கள் எனவும் கூறப்படுகிறது. கல்வியை இலவசமாகக் கற்றுத் தரும் மடங்களுக்கும், கோயில்களுக்கும், ஏராளமான மானி யங்களை மன்னர்கள் வாரி வழங்கினார்கள். -