பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. மதுரை நாயக்கர்களும் கிறித்துவப் பாதிரிமார்களும் வீரப்ப நாயக்கன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த போது. கி.பி. 1592ல் பெர்னாண்டஸ் பாதிரியார் தலைமை யில், மதுரையில் ஒரு மாதா கோயிலும், சமய மாற்று நிலையமும் நிறுவப்பட்டன. தமிழகத்து உயர் வகுப்பு மக்களை கிறித்துவராக்குவதே அவர்கள் நோக்கமாம்: ஆயினும் மாட்டிறைச்சி உண்பது, மதுபானம் குடிப்பது, புலையரோடு கலந்து பழகுவது ஆகிய அவர் செயல்களை மக்கள் வெறுத்தனர்; அவர்களைப் பறங்கிகள் என இழித்தும் கூறினர். போர்ச்சுகீசியப் பாதிரிமார்களின் நெஞ்சுரம், படைபலம், செல்வச் செருக்கு எதுவும் தமிழர் உள்ளத்தை மாற்றி இயலவில்லை. அதனால் பாதிரிமார் களின் தொடக்க முயற்சி தோல்வியில் முடிந்தது. முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், கி.பி. 1606ல் ராபர்ட்-டி-நொபிலி என்பவர், மதுரைப் பாதிரிமார்களின் தலைவராகப் பதவி ஏற்றார்; அவர் காலத்தில், இந்தியர் களைக் கிறித்துவராக்கும் பணி பெரு வெற்றி பெற்றது. தம் முன்னையோர் தோல்விக்கான காரணங்களை அவர் தெரிந்திருந்தமையால், அவர் முற்றிலும் வேறான முறை யைக் கடைப் பிடித்தார். தமிழ்நாட்டு மக்களின் மதிப்பைப் பெறும் பொருட்டு' தம்மையும் ஓர் தமிழனாகவே மாற்றிக் கொண்டார்.