பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காலத்தோறும் தமிழகம் உணவு, உடைகளில் மாற்றம் செய்து கொண்டார். தமிழில் தெளிவாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவ்வகைகளால், அவர் உரோம் .ب »w 1 : .டு: பார்ப்பசேர் எனக் கூறுமளவு பாராட்டப் பெற்றார். மக்கள் மனதில் இடம் பெற்றதுமே, உயர் வகுப்பு இந்துக்கள் சிலரை கிறித்தவ ராக்கினார். ஆகவே, முத்து கிருஸ்ணப்ப நாயக்கர் காலமே தமிழ்நாட்டில் கிறித்துவ மதம் கால் ஊன்றத் தொடங்கிய காலமாயிற்று. - முத்துவீரப்ப நாயக்கர் காலத்தில் கி.பி. 1610ல் நொபிலி மதுரையில் புதிய மாதா கோயில் ஒன்றைக் கட்டினார். அவருக்குத் துணையாக அன்டோனியோ விகோ என்பவரும் வந்து சேர்ந்தார். நொபிலி இவ்வாறு சமயப்பணி ஆற்றி வருங்கால், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட பெர்ணாண்டஸ் பாதிரியார், அவர்மீது குற்றங்கள் சாட்டி, மேலிடத்திற்கு முறையிட்டுக் கொண்டார். அது விசாரிக் கப்பட்டு நொபிவி குற்றம் அற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப் பட்ட கி. பி. 1823 வரை, நொபிலி செயலற்றவராக்கப் பட்டார். சமயப் பணியும் தடைப்பட்டு நின்றது. தீர்ப்புக் குப் பிறகு சமயப் பணியை மீண்டும் தொடங்கிய நொபிலி, மதுரை மடாலயப் பொறுப்பை விகோ பால் ஒப்படைத்து விட்டு, சேலம், சேந்தமங்கலம், திருச்சிராப்பள்ளி முதலாம் இடங்களில் தன் பணியைத் தொடங்கினார். நாயக்க மன்னர், மைசூர், திருவாங்கூர் அரசுகளோடும், சேதுபதியோடும் மேற்கொண்ட போர்காரணமாக நொபிலி சிறையில் அடைக்கப்பட்டாரேனும், போர்ச்சுகீசிய ஆளுநர் அவர்கள் வேண்டுகோள் ஏற்று, அப்போது ஆட்சிப் பொறுப் பில் இருந்த திருமலை நாயக்கர். நொபிலியை விடுதலை செய்தார். மேலும் விரும்பி முன்வருவோரை, கிறித்துவ ராக்கவும் உரிமை வழங்கினார். - ஆனால், கிறித்தவப்பாதிரிமார்கள்மீது மக்கள்கொண்ட வெறுப்பு அறவே மங்கி விடவில்லை; மாறாக, சிற்சில